Posts

Showing posts with the label innocence proven

இறந்த மனைவி உயிருடன் எதிரே நின்ற அதிர்ச்சி.. கொலையாளியாக ஜெயிலுக்கு சென்ற கணவன்.. சினிமாவை மிஞ்சும் திடுக் திருப்பம்..

Image
குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் சுரேஷ். கூலி வேலை செய்து, மனைவி மல்லிகையுடன் நிம்மதியான வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால், அவர்களின் அமைதியான வாழ்க்கையில் இடியாக வந்து விழுந்தது மல்லிகையின் மர்மமான மறைவு. செல்போன் மூலம் மல்லிகைக்கு ஏற்பட்ட ஒரு புதிய நட்பு, பின்னர் காதலாக மாறி, இருவரும் தனிமையில் சந்தித்து உறவை வளர்த்தனர். இதன் விளைவாக, ஒரு நாள் மல்லிகை வீட்டை விட்டு காணாமல் போனார். பதறிப்போன சுரேஷ், அக்கம் பக்கம், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் விசாரித்து, இறுதியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பதிவு செய்த காவல்துறை, வழக்கமான விசாரணையைத் தொடங்கியது. ஆனால், சில நாட்களில், கர்நாடக மாநிலத்தில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடைத்ததாக தகவல் வந்தது. இந்த சடலத்தை, காணாமல் போனவர்கள் பட்டியலுடன் ஒப்பிட்டு, மல்லிகையின் அடையாளங்களுடன் ஒத்துப் போவதாகக் கருதிய காவல்துறை, மல்லிகையின் பெற்றோரை அழைத்து சடலத்தைக் காட்டியது. பெற்றோர்களும் உணர்ச்சிவசப்பட்டு, அது தங்கள் மகள் மல்லிகை என்று உறுதிப்படுத்தினர்.ஆனால், இங்கு தான் நீதியின் பயணம் தவறியது. ட...