Posts

Showing posts with the label Hapur

காதலியை கண்ட இடத்தில் கை வைத்த காதலன்.. உள்ளே நுழைந்த காதலியின் அண்ணன்.. பகீர் CCTV..

Image
ஹாபூர்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள பெப்பர் பீட்சா கடையில் காதலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நகர் கோத்வாலி பகுதியில் உள்ள ஃப்ரீகஞ்ச் சாலையில் அமைந்துள்ள பீட்சா கடையில் ஆகஸ்ட் 7 அன்று நிகழ்ந்தது.சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளின்படி, ஒரு இளம்பெண் தனது காதலனுடன் பீட்சா கடையில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களுடன் கடைக்குள் நுழைந்து, காதலனை இரும்பு கம்பியால் தாக்கத் தொடங்கினார். காதலன் மீது குத்தி, உதைத்து, இரும்பு கம்பியால் அடித்து கடுமையாக தாக்கப்பட்டார். பெண் தனது காதலனை காப்பாற்ற முயன்றபோது, அவரது அண்ணன் அவரையும் தாக்கி, பலமுறை கன்னத்தில் அறைந்தார். இந்த வன்முறைக் காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இந்த சம்பவத்தால் கடையில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் தலையிட்டு மோதலை தடுக்க முயன்றனர், ஆனால் அண்ணனும் அவரது நண்பர்களும் காதலனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இந்...