Posts

Showing posts with the label minor girl protection

சேலம் வழிப்பறி சம்பவம்.. தாக்கப்பட்ட நபர் செய்த செய்த தில்லாலங்கடி வேலை.. விசாரணையில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

Image
சேலம், அக்டோபர் 26 : தமிழ்நாட்டை உலுக்கிய பட்டபகல் வழிப்பறி வீடியோவில் மறைந்திருந்த உண்மை இன்று வெளியானது. இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியை ஆபாச சாட்சிங் செய்து பிளாக்மெயில் செய்த இளைஞரை தடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சம்பவத்தின் மெயின் 'வில்லன்' என்று கூறப்படும் பிரம்மநாயகம் என்பவர் பொய் புகார் கொடுத்துவிட்டு தப்பி ஓடியது போலீஸ் செயல்பாட்டில் கேள்விகளை எழுப்பியுள்ளது. குழந்தைகள் நல ஆர்வலர்கள், 'போக்சோ' சட்டத்தின் கீழ் அவரை ஏன் கைது செய்யவில்லை என விமர்சித்துள்ளனர். வைரல் வீடியோவின் தொடக்கம்: 'அப்பாவி'யின் புகார் சேலம் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தில் அக்டோபர் 25 அன்று காலை 7 மணிக்கு நடந்த சம்பவம். மூன்று இளைஞர்கள் ஒரு இளம் ஆணை தாக்கி, அவரது செல்போனை பறித்து ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. தாக்கப்பட்டவர், தன்னை 'அப்பாவி'யாக சித்தரித்து, "திருநெல்வேலி நண்பர் கூப்பிட்டதாக வந்தேன். பாலத்துக்கு வந்ததும், 'கூல் லிப்' இருக்கா? 'ஹான்ஸ்' இருக்கா? என கேட்டு, அடித்து போனை பறித்தனர்"...