Posts

Showing posts with the label Ramanibai

பிரம்படியை விட ஆபத்தான செயலை செய்த 3 ஆசிரியைகள்.. 9ம் வகுப்பு மாணவி கோர முடிவு.. கொடூர சம்பவம்..

Image
கோயம்புத்தூர், நவம்பர் 21 : கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி முத்து சஞ்சனா (வயது 14), பள்ளி ஆசிரியர்களின் தொடர் அவமானம் மற்றும் உளவியல் துன்புறுத்தலால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டிய ஆசிரியர்கள், மாணவியை கேலி செய்து அவமானப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மூன்று ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்து சஞ்சனா, வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் பள்ளிக்கு சென்றபோது, தலைமுடியை வாரி சீவியிருந்ததைப் பார்த்து, ஆங்கில ஆசிரியை ஷயாமலாதேவி, "நீ என்ன கிழவியா? இப்படி தலை சீவிகிட்டு வந்திருக்க" என்று 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதாக மாணவி தனது மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால், மற்ற மாணவர்கள் கேலியாக சிரித்ததால், தனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டதாக...