வீட்டிலிருந்து ஓடிய முரட்டு ஆள்! மிலிட்டரி கணவனை நூதனமாக ஏமாற்றிய அமுக்கு ராணி மனைவி! இறுதியில் ட்விஸ்ட்!
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய முத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தோஷ் குமார். பள்ளி ஆசிரியையான மோனிஷாவுடன் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராணுவத்தில் பணிபுரிந்த சந்தோஷ் குமார், மனைவியை ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரிக்கு அனுப்பி தனது சொந்தப் பணத்திலேயே படிக்க வைத்தார். பின்னர் மனைவி சிலருடன் நெருக்கமாகப் பழகுவதாகத் தெரிந்ததால் விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊரிலேயே பால் பண்ணை நடத்தி வந்தார். மோனிஷா கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மோனிஷா, திருமணமான நாள் முதலே கணவர் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததாகவும், ஒரு ரூபாய்க்குக் கூட பயனில்லை என்று தன்னைத் தாக்கித் தாய்வீட்டுக்கு அனுப்பிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். தாய்வீட்டுக்கும் வந்து ஏடிஎம் கார்டைக் கேட்டு அடித்து, கழுத்தில் இருந்த செயின், கையில் இருந்த வளையல் உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றதாகவும் கூறினார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தான் புகார் கொடுத...