Posts

Showing posts with the label municipal corporation

"அய்யோ... குடும்பமே போச்சே" திருமணமான 6 மாதத்தில் சோகம் அடித்து கொண்டு கதறிய தந்தை 6 மணி நேரமாக போராடிய காட்சி

Image
கோயம்புத்தூர் : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில், இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தது என்ன? பாரதி பார்க் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான 15 அடி விட்டம் மற்றும் 40 அடி ஆழம் கொண்ட பிரம்மாண்ட கழிவுநீர் தொட்டி ஒன்று இயங்கி வருகிறது. இந்தத் தொட்டியில் இருந்த 60 HP குதிரைத்திறன் கொண்ட மோட்டார் கடந்த 3-ம் தேதி பழுதானதாகக் கூறப்படுகிறது. இதனைச் சரி செய்வதற்காக, ரத்தினபுரியைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளி அர்ஜுன் குமார் (38) என்பவர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தொட்டிக்குள் இறங்கியுள்ளார். மோட்டாரைப் பொருத்திவிட்டு அவர் மேலே ஏறி வந்தபோது, எதிர்பாராத விதமாகத் தலை தொட்டியின் மேல் பகுதியில் மோதியதில் நிலைதடுமாறி 40 அடி ஆழ கழிவுநீருக்குள் விழுந்துள்ளார். அர்ஜுன் குமார் விழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியரான பாப்பம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரிசியன் சுரேஷ் (27), அவரை மீட்க உடனடியாகத் ...