Posts

Showing posts with the label forest land rights

மருமகனை தேடிச்சென்ற மாமியார்.. பின்னால் சென்ற மகள்.. காட்டில் நிர்வாணமாக தாயின் சடலம்.. சினிமாவை மிஞ்சும் மர்மம்..!

Image
திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதிக்குட்பட்ட புதூர் நாடு அருகே நடுக்குப்பம் கிராமத்தில் சொத்து பங்கீடு தொடர்பான பிரச்சினையால் மகளும் மருமகனும் சேர்ந்து பெற்ற தாயை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சாம்பசிவம் - சின்னகாளி தம்பதிக்கு காளீஸ்வரி, கீதா என்ற இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களும் திருமணமாகி சென்ற நிலையில், சாம்பசிவம் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதையடுத்து சின்னகாளி தனியாக வசித்து வந்தார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இரவு, சின்னகாளியின் இரண்டாவது மகள் கீதா, தனது கணவர் சிதம்பரம் காணவில்லை எனக் கூறி தாயாரை அழைத்துக்கொண்டு வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த சிதம்பரம், மாமியார் சின்னகாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் இறங்கியுள்ளார். இதில் கீதா தனது தாயாரை கணவருடன் சேர்ந்து தாக்கியதுடன், கையைப் பிடித்து மடக்கி வைத்துள்ளார். ஆத்திரமடைந்த சிதம்பரம் கல்லால் சின்னகாளியின் தலையில் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலைக்கு...