Posts

Showing posts with the label Raghunandan

அமெரிக்காவில் மரண தண்டனை பெற்ற முதல் இந்தியர்.! சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட் நிறைந்த வழக்கு.!

Image
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியாவைச் சேர்ந்த வெங்கட பிரசாத் மற்றும் அவரது மனைவி லதா புனூரு, மென்பொருள் பொறியாளர்களாக, பெரும் கனவுகளுடனும் நம்பிக்கையுடனும் அமெரிக்காவுக்கு பயணித்தனர். பென்சில்வேனியாவில் உள்ள அமைதியான குஷியான் நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர். புதிய உலகில் காலடி எடுத்து வைத்த அவர்களுக்கு, இங்கு பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன, வசதியான வாழ்க்கை கட்டமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அவர்களது குடியிருப்பில் மற்ற இந்தியக் குடும்பங்களும் வசித்ததால், உணவு பரிமாற்றம், கதைகள், ஒன்றாக வெளியே செல்வது என அவர்கள் விரைவில் நட்பு வட்டத்தை உருவாக்கினர். 2008 ஜனவரியில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது—சான்வி. இந்தக் குழந்தை அவர்களது வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சியாக்கியது. ஆந்திராவில் உள்ள வெங்கட பிரசாத்தின் பெற்றோர், தங்கள் பேத்தி சான்வியை நேரில் பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். வெங்கட பிரசாத் மற்றும் லதா, சான்வியை இந்தியாவுக்கு அழைத்து வந்து தாத்தா-பாட்டிக்கு காட்டியபோது, அவர்களது கண்கள் மகிழ்ச்சியில் குளமாகின. பாட்டி சத்தியவதி, “என்...