Posts

Showing posts with the label child tragedy

“TV-யில் அந்த காட்சியை பார்த்ததும் உடலுறவு ஆசை வந்தது..” காமம் தலைக்கேறிய பெண் செய்த கொடூரம்!

Image
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள குச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த ஜோதி (வயது 28) என்ற பெண்ணுக்கு தன் கணவரின் உறவினருடன் தகாத உறவு இருந்தது. இந்த உறவு வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக தன் 5 வயது மகன் ஜீவாவை கொலை செய்த வழக்கில், மதுரை ஐந்தாவது கூடுதல் முதன்மை மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆனந்த ஜோதியின் கணவர் ராம்குமார் கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு பிறந்த ஜீவா அங்கன்வாடியில் படித்து வந்தான். குடும்பச் செலவுகள் அதிகரித்ததால் ஆனந்த ஜோதி விருதுநகரில் ஒரு கடையில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். அந்தச் சமயத்தில் கணவரின் உறவினரான 24 வயது மருதுபாண்டியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி நெருக்கம் அதிகரித்தது. கணவர் வேலை காரணமாக வீட்டில் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். எப்போதுமே திட்டமிட்டு உல்லாசமாக இருக்கும் ஆனந்த ஜோதி மற்றும்மருதுபாண்டிஒரு நாள் திடீரென எந்த முன் திட்டமிடலும் இல்லாம...