கோயிலில் பதுக்கப்பட்ட 200 கோடி.. அஜித்திற்கு தெரிந்த ரகசியம்.. கொலஐ செய்ய சொன்ன அமைச்சர்? வெளிவந்த உண்மை..
சிவகங்கை : தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புறம் காளி கோவில் காவலர் அஜித் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம், வெறும் நகைத் திருட்டு வழக்காக முடிந்துவிடவில்லை. இதற்கு பின்னால் மிகப்பெரிய சதி மறைந்திருப்பதாக ‘Prabha Talks’ என்ற யூட்யூப் சேனல் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு, திமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மையப்படுத்தி, தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. நடந்தது என்ன? ஜூன் 27, 2025 அன்று காலை 9:30 மணியளவில், மடப்புறம் காளி கோவிலில் நிர்வாகியாக பணியாற்றி வந்த நிக்கிதா என்பவர், தனது நகை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கோவில் காவலரான அஜித் குமார் மீது சந்தேகம் எழுந்து, அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், அஜித் குமார் நகையை திருடவில்லை என உறுதியானதை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அடுத்த நாள் மாலை 5 முதல் 6 மணிக்குள் அஜித் குமார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், வெறும் நகைத் திருட்டு வழக்க...