லாட்ஜில் 3 இளைஞர்களுடன் 47 வயது பெண் செய்த அசிங்கம்.. வலியே இல்லாமல் உறுவி எடுத்த கொடூரம்..
திருச்சி: சமூக வலைதளங்களில் காதல் தேடி வந்த மூன்று இளைஞர்களை ஹனி ட்ராப் மூலம் வசப்படுத்தி, மயக்க மருந்து கலந்த டீ கொடுத்து தங்க நகைகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களைப் பறித்த மூன்று பெண்கள் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சி சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. சம்பவம் குறித்த விவரங்கள் வருமாறு: திருச்சியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் (வயது 20-25) நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பெண்களிடம் நட்பு ஏற்படுத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பெண்ணின் ஐடியிலிருந்து நட்பு ரீதியான செய்திகள் வந்தன. பின்னர் அது காதல் உரையாடலாக மாறியது. நீண்ட நாட்கள் போனில் பேசிய பிறகு, இருவரும் நேரில் சந்தித்து உறவை மேம்படுத்த முடிவு செய்தனர். மூன்று இளைஞர்களும் மூன்று பெண்களும் சந்திக்க ஒருங்கிணைந்த இடம் சமயபுரம் மாரியம்மன் கோவில். “கோவிலுக்கு வந்தால் யாருக்கும் சந்தேகம் வராது, சாமி தரிசனம் செய்து காதலையும் வளர்த்துக் கொள்ளலாம்” என பெண்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்படி, இளைஞர்கள் டிப்-ட...