நடிக்க வாய்ப்பு.. எல்லாத்தையும் கழட்டு.. ஒரே நேரத்தில் 3 பேர், வசமாக சிக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை.. பரவும் வீடியோ!
சென்னை : சினிமா, சீரியல் வாய்ப்பு தேடும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு போலி டைரக்டர்கள் செயல்படும் இடமாக வடபழனி, சாலிகிராமம், கோடம்பாக்கம் பகுதிகள் மாறியுள்ளன. இந்த மோசடி கும்பலின் புதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் வடபழனி காவேரி தெருவில் உள்ள லக்ஸ் ரெசிடென்ஸியில் நடைபெற்றது. விஜய் டிவியில் சிறிய வேடங்களில் நடித்து வரும் ஒரு பிரபல சீரியல் நடிகையை இன்ஸ்டாகிராம் மூலம் அணுகியவர் நந்திராமன் என்ற நபர். தன்னை பெரிய பட டைரக்டர் என்று அறிமுகப்படுத்திய அவர், “நான் ஒரு பக்தி படம் எடுக்கப் போகிறேன். அம்மன் கேரக்டருக்கு உங்களைப் பொருத்தமாகப் பார்க்கிறேன். போட்டோ ஷூட் செய்ய வாருங்கள்” என்று அழைத்தார். நம்பிய நடிகை இரண்டாவது மாடியில் உள்ள அறைக்குச் சென்றார். அங்கு நந்திராமன் மட்டுமல்லாமல் இரண்டு பெண் உதவியாளர்களும் இருந்தனர். முதலில் சாதாரண போட்டோ ஷூட் என்று தொடங்கிய நிலையில், பின்னர் நந்திராமன் “அம்மன் கேரக்டருக்கு உடலில் தழும்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்” என்று கூறி உடைகளைக் களையும்படி கேட்டார். நடிகை மறுத்ததும் மூவரும் சேர்ந்து மிரட்டல் விடுத்தனர். கதறிய நட...