பெற்ற தாய் என கூட பார்க்காமல்.. தாலியை கழட்டி.. 14 வயது மகன் செய்த அசிங்கம்.. காட்டிக்கொடுத்த ஆதாரம்..
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கீழக்குப்பம் வேலூர் கிராமத்தில் தீபாவளி பண்டிகை முன்னரே நடந்த ஒரு சம்பவம் கொடூரமான முடிவை எட்டியது. லாரி ஓட்டுனரான குணசேகரனின் மனைவி மகேஸ்வரி (35), தனது 14 வயது சிறுவனான இரண்டாவது மகனால் அவரது தாலி கழட்டப்பட்டு அரங்கேறிய கொடூரத்திற்கு இரையானார். மகேஸ்வரியின் மகன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கை சந்தேக மரணத்தில் இருந்து கொலை வழக்காக மாற்றி, அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். என்ன நடந்தது..? வாங்க பாக்கலாம். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் குணசேகரன் (அய்யனூர்) மற்றும் மகேஸ்வரி (வேலூர்) இடையே திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். லாரி ஓட்டுநராகப் பணியாற்றும் குணசேகரன், வேலைக்காக வெளியூர்களுக்குச் சென்று சில நாட்களுக்குப் பிறகு வீடு திரும்புவார். அப்போது வீட்டு செலவுகளுக்கும், குழந்தைகளுக்கான தின்பண்டங்களுக்கும் போதுமான அளவு பணம் மற்றும் பொருட்களை வாங்கி வருவதால், குடும்பத்தில் பொதுவாக அமைதி நிலவியதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இருப்பினும், தம்பதிக்கிடை...