Posts

Showing posts from July, 2019

பட விழாவிற்கு படு மோசமான கவர்ச்சி உடையில் வந்திருந்த கியரா அத்வானி - வைரலாகும் புகைப்படம்

Image
தற்போது இந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மனதை சுண்டி இழுபவர் இந்தி நடிகை கியாரா அத்வானி. எம்.எஸ்.தோனி திரைப்படம் மூலம் இந்திய முழுக்க அறிமுகமானவர்.  தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துவருகிறார். இவரது அழகுக்கும், நடிப்புக்கும் பல ரசிகர்கள் அடிமையாகியுள்ளனர்.இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகிய Fugly என்ற இந்தி படத்தில் அறிமுகமாகினர்.  இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு ஓரிரு ஆண்டு இவர் விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்து வந்தார்.அதன் பின் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகிய எம்.எஸ்.தோனி திரைப்படம் மூலம் இந்திய முழுக்க இவரது முகம் அறிமுகமானது. தோனி திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இவருக்கு நிறையத் திரைப்படங்கள் வாய்ப்புத் தேடிவந்தது. தெலுங்கில் மகேஷ் பாபுவின் ஜோடியாக "Bharat Ane Nenu" திரைப்படத்தில் நடித்தார்.  இந்தத் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது.அதன்பின் கரண் ஜோகர் தயாரிப்பில் வெளியான "Lust Stories" திரைப்படம் இவருக்குப் பெரும் ரசிகர்களை உண்டாக்கியது. கொஞ்சம் ஏடாகூடமான காட்சிகளிலும் கச்சிதமாக நடித்திருந்தார். அந்த படம...

அகில உலக சூப்பர் ஸ்டாரின் அடுத்த அவதாரம்..! - புகைப்படம் உள்ளே

Image
சுமோ இயக்குனர் எஸ் பி ஹோசிமின் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா, பிரியா ஆனந்த் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம்.  இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் இஷரி கே கணேஷ் தனது வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்ன இசையமைத்துள்ளார்.  இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டில் நகைச்சுவை படமாக்கப்படும் இத்திரைப்படத்தில் வி டி வி கணேஷ், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஜப்பான் நாட்டில் உள்ள சுமோ வீரர் யோஷிநோரி தாஷிரோ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி கதையாக கலந்து சீரியஸ் விசயங்களை புகுத்தி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா தனக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியாக டிவிட்டர் மூலமாக கூறினார்.  இந்நிலையில், இவர் நடித்துக்கொண்டிருக்கும் சுமோ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் குங்-பூ மாஸ்டர் அவதாரம் எடுத்திருக்கிறார் நம்ம சிவா.  இதோ அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  SUMO TAMIL MOVIE

சன்னிலியோனால் ஒரு முறை இரு முறை அல்ல 400 முறை பாதிக்கப்பட்ட வாலிபர்..!

Image
அந்த மாதிரியான படங்களில் நடித்து இளசுகளிடம் பிரபலாமானவர் சன்னிலியோன். இந்த பிரபலத்தை வைத்து இந்திய சினிமாவிலும் நுழைந்து விட்டார்.  தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கூட வீரமாதேவி என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் ரோஹித் சௌகான் இயக்கத்தில் உருவான அர்ஜூன் பாட்டியாலா படத்தில் சன்னி லியோன் ஒரு போன் நம்பரை கூறியுள்ளார்.  இதனை சன்னி லியோனுடைய போன் நம்பர் தான்  என நினைத்து இளைஞர் ஒருவர் தொடர்ந்து 400 முறை போன் செய்துள்ளார். மறுமுனையில் போனை எடுத்த நபர் இது சன்னி லியோன் நம்பர் இல்லை என கூறியுள்ளார். ஆனால், பல இளைஞர்கள் இது சன்னி லியோனா..? என்று 400-க்கும் மேற்பட்டோர் அவரை தொடர்பு கொண்டு இரவு, பகல் என பாராமல் போன் செய்து கொண்டிருகிறார்கள். இதனால் வெறுப்பான அந்த வாலிபர் ஒரு கட்டத்தில் போலீசில் புகார் தெரிவித்து விட்டார். இதனால், தொடர்ந்து போன் செய்து தொந்தரவு கொடுத்த இளைஞர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர் போலீசார்.

"சிறுக்கி சிரிச்சு வந்தா சீனா தானா டோய்" நடிகை ரகசியா என்ன ஆனார்..? - இதோ புகைப்படம்

Image
வசூல் ராஜா படத்தில் இடம் பெற்ற சிறுக்கி சிரிச்சு வந்தா சீனா தானா டோய் என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார் நடிகை ரகசியா. தொடர்ந்து பல படங்களில் ஐட்டம் நடிகையாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். அழகாக இருக்கும் இவரிடம் ஏன் நீங்கள் ஹீரோயின் ஆக முயற்சி செய்ய வில்லை என்றா கேட்டதற்கு, யார் சொன்னது..? நான் ஹீரோயினா நடிக்கல னு, நான் இங்கே அறிமுகம் ஆகுறதுக்கு  முன்னாடி, ஹிந்தியில் 'பாம்பே டூ கோவாங்கிற படத்துல ஒரு வெயிட்டான கேரக்டர்ல  நடிச்சேன். அந்த படத்துல சனா கான், ஐட்டம் ஸாங் பண்ணி இருந்தாங்க.  என்ன  பண்றது, வாழ்க்கை ஒரு வட்டமாச்சே. இப்போ சனா கான் ஹீரோயின் ஆயிடாங்க. நான் ஐட்டம் டான்சர் ஆகிட்டேன். நான் ஒரு தடவை சென்னைக்கு ஒரு ஸ்டேஜ்  ஷோவுக்கு வந்திருந்தேன்.  அப்போ சுந்தர்.சி என்னைப் பார்த்துட்டு, ஹீரோயினா  நடிக்கிறியானு கேட்டார். அப்போ என் காலேஜ் படிப்பு முடியலை. ஸோ என்னால  முடியாதுனு சொல்லிட்டேன். காலேஜ் முடிஞ்ச பிறகு, பாக்கெட் மணி  கிடைக்குதே என்று தான் ஐட்டம் டான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஆனால், காலங்க...

கவர்ச்சி நடிகை சோனா-வின் தற்போதைய நிலை..! புகைப்படம் உள்ளே

Image
தமிழ் பட உலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சோனா. இவர் மிருகம், குசேலன், குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு, யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.  சினிமாவில் முன்னணியில் இருந்த சமயத்தில் இயக்குனர் சரண் மீது பாலியல் புகார் ஒன்றை வைத்தார். அதன் பிறகு, ஆள் எங்கே போனார் என்றே தெரியவில்லை. இதனால், சமீபகாலமாக அவருக்கு புதிய படங்கள் இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவதார வேட்டை படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து சோனா அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, எனக்கு கவர்ச்சியாக நடித்து சலிப்பு ஏற்பட்டு விட்டது. ரசிகர்களும் என்னை கவர்ச்சியாக பார்த்து சலிப்படைந்து இருப்பார்கள்.  இதனால் இனிமேல் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பது என்றும் முடிவு செய்தேன். நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்த பிறகு புதிய படங்களில் நடிக்க யாரும் அழைக்கவில்லை.  இதனால் 2 வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன். அதுபற்றி கவலைப்படவில்லை. இப்போது மலையாள படங்களில் அதிகமாக நடித்து வருகிறேன். மலையாள படம் என்றதும் தவறாக நினைக்...

VJ ரம்யாவின் இரண்டாவது கணவர் இவரு தான்..! - ரசிகர்கள் கிண்டல்..!

Image
விஜய் டி.வி.யில் தொகுப்பாளினியாக இருந்தவர் ரம்யா சுப்பிரமணியம். ஒரு கட்டத்தில், சின்னத் திரையில் இருந்து அவர், வெள்ளித் திரைக்கு மாறினார். ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறார்.  கடந்த 2014ல், அவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கை சில காலங்களிலேயே கசந்து விட, இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின்பே, ரம்யா, வெள்ளித் திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.  இந்நிலையில், அவருக்கு 33வது பிறந்த நாள் வர, அன்றைய தினத்தை அவர் மிகவும் சிறப்பாக கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது, அவர் பிரமிக்கும் வகையில், அவரது ஜிம் பயிற்சியாளர் ஒரு பரிசு அளித்தார்.  அந்தப் பரிசு - செயற்கையான எலும்புக் கூடு. இது குறித்து பெருமையாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ரம்யா, 'என்னுடைய புது Boy Friend' என கூறியிருக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள், ஆமா அவரையே இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்நாள் முழுதும் உங்களுக்கு இந்த கணவனால் எந்த பிரச்னையும் வராது என ந...

யப்பா.., சாமி..! முடியலடா டே..! - ரசிகர்களை கடுப்பாக்கும் பிக்பாஸ்

Image
பிக்பாஸ் 3வது சீசனில் காதலர்கள் என்று கவின்-சாக்ஷியை கூறினோம். அவர்களும் இருக்கு, இல்லை என மாற்றி மாற்றி பேசி பார்வையாளர்களையும் குழப்பி வந்தார்கள். ஆனால், இருவருக்குள்ளும் எதோ ஒன்று நடந்திருகின்றது. ஆனால், பிக்பாஸ் குழு அதனை மறைக்கிறது. அடிக்கடி,கவின் நான் உன்னிடம் நட்பாகத்தான் பழகினேன் என கூறும் போதெல்லாம் அப்புறம் எதுக்கு அப்படி பண்ண..? என்று ஷாக்சி சொல்லிக்கொண்டே இருப்பார்.  அப்படி என்ன நடந்தது என பிக்பாஸ் காட்டவே இல்லை. அனேகமாக, மருத்துவமுத்தம் போல எதையாவது அல்லது அதையும் தாண்டி எதையாவது செய்திருப்பாரா என்பதை உங்களுடைய யூகத்துக்கே விட்டு விடுகிறோம். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக மீரா மிதுனை வைத்து காலம் கடத்தி வந்த பிக்பாஸ் இப்போது மீண்டும் கவின் ஷாக்சி காதல் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இப்போது காலை வந்த புரொமோ இரண்டிலும் கவின், சாக்ஷி, லாஸ்லியா மூவரை சுற்றியே இருந்தது. இப்போது வந்த புதிய புரொமோவில் பிரேக் அப் ஆகிவிட்டது என்று சாக்ஷி தேம்பி தேம்பி காதல் தோல்வியில் அழுகிறார். ஷெரின் மற்றும் ரேஷ்மா இருவரும் இதோடு நாளை முதல் புதிய நா...

தயாரிப்பாளரிடம் விரல் நடிகர் செய்த ரகளை - மறுபடியும் மொதல்ல இருந்தா..???

Image
நாதஸ் திருந்திட்டான் பா..! அவனே சொன்னான்..! என்பதற்கு ஏற்பார் போல திடீரென டக் டக் என இரண்டு படங்களில் எந்த பிரச்சனையயுமின்றி நடித்து முடித்தார் விரல் நடிகர். யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை மீண்டும் தன்னுடைய வேலையை காட்ட தொடங்கியுள்ளார். அவர் இரண்டு படங்களில் நடித்து முடித்ததற்கு காரணமே அவருக்கு இருந்த பண பிரச்சனை தான் எனவும் இப்போது பணம் வந்துவிட்ட காரணத்தால் மீண்டும் தன்னுடைய வேலையை காட்டுகிறார் எனவும் கூறுகிறார்கள்.  தற்போது, 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடித்து வரும் அவர் படப்பிடிப்புக்கு இரவு நேரத்தில் தான் வருவேன். ஞாயிற்று கிழமை விடுமுறை என பல விதிமுறைகளை போட்டுவந்துள்ளார். அதனை பொறுத்துக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் அவர் செய்த இன்னொரு செயலை தாங்க முடியாமல் டோஸ் விட்டுள்ளது. தயாரிப்பாளரின் கணக்கில் ஸ்டார் ஓட்டலில் தங்கும் நடிகர் தான் மட்டுமின்றி தனது நண்பர்களையும் சேர்த்து கொண்டு போய் ஓட்டலில் தங்க வைத்து தயாரிப்பாளரின் கணக்கில் ஏற்றியுள்ளார்.  என் படத்துல நீங்க நடிக்குறீங்க.? உங்களுக்கு செலவு பண்றதுல ...

அவன் நடிப்பை பார்த்து நானே ஏமாந்து போனேன் - கவினை விளாசிய தயாரிப்பாளர்

Image
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருக்கும் கவினுக்கு ஏற்கனவே காதலி இருப்பது எனக்குத் தெரியும் என தயாரிப்பாளர் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் 16 பேரில் ஒருவராக கலந்து கொண்டவர் கவின்.  இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டில் எப்போதும், பெண்களுடனேயே இருப்பதாக புகார் எழுந்தது. இருந்தபோது, அவர் போட்டியாளர்கள் லாஸ்லியாவையும், சாக் ஷியையும் காதலிப்பது போல நடந்து கொண்டார். இறுதியில், இருவருடனும் நான் நட்பாகத்தான் பழகினேன் என கழன்று கொண்டார்.  இது பார்வையாளர்களையும், சக போட்டியாளர்களையும் எரிச்சலுக்கு ஆளாக்கியது.இந்நிலையில், கவினுக்கு, ஏற்கனவே ஒரு காதலி உண்டு. அவர், காதலியோடு பேசுவதை நான் பார்த்திருக்கிறேன் என, நட்புன்னா என்னன்னு தெரியுமா? படத்தின் தயாரிப்பாளரான சந்திரசேகர் திடீர் குண்டு போட்டிருக்கிறார். அவர், சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:கவின் நல்ல நடிப்புத் திறமை மிக்கவர். அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து, அவரை வைத்து, ஒரு காதல் படம் எடுக்க வேண்டும் என வி...

45 வயதில் இப்படி கவர்ச்சி காட்டவேண்டுமா..? - கடை திறப்பு விழாவில் நடிகை கஜோல் - வைரல் வீடியோ

Image
நடிகை கஜோல் 90's கிட்ஸ்களின் கனவுக்கன்னி. அழகான கண்களை கொண்ட இவர் பொதுவாக அதிகமாக மேக்கப்போடுவது கிடையாது. பாலிவுட்டில் பிரதானமாக நடித்து வந்த இவர் தமிழ், தெலுங்கு என சில தென்னிந்திய மொழிப்படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.  சமீபத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடிக்கவிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய். படத்தில் எனக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை என்று விலகியதை தொடர்ந்து நடிகை கஜோல் அதில் நடித்தார்.  பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் இருகிறார்கள். படம் நடிப்பது மட்டுமின்றி கடை திறப்பு விழாக்களுக்கு செல்லுவது மற்றும் விளம்பர படங்களிலும் நடிப்பது என கல்லா கட்டிவருகிறார். சமீபத்தில், சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றின் திறப்பிற்கு வந்திருந்த அவர் தன்னுடைய முன்னழகு தெரியும் படி சேலை அணிந்து வந்திருந்தார். நிகழ்ச்சி முடியும் வரை அந்த சேலையை சர்செய்த பாடில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் 45 வயதிலும் இப்படியொரு கவர்ச்சி தேவையா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள...

ஜானுவாக மாறிய லாஸ்லியா குறித்து நடிகை திரிஷா என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

Image
திரிஷா சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த திரிஷா, பல புதுமுகங்களின் வரவால் அவருடைய மார்க்கெட் டல்லடித்தது.  அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தவருக்கு அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை. பிறகு தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையில் காதல் என தென்னிந்தியாவில் கிசுகிக்க அவர்களோ நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி எஸ்கேஎப் ஆகினர். தற்போது, ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வரும் திரிஷா சமீபத்தில் நடித்த "96" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விண்ணைதாண்டி வருவாயா ஜெஸ்சி-க்கு பிறகு "96" ஜானு தான் என்று ரசிகர்கள் பாராட்டுகளை பெற்றார்.  இந்நிலையில், நேற்று நடந்த பிக்பாஸ் போட்டியில், பெண் போட்டியாளர் லாஸ்லியா-விற்கு ஜானு கதாபாத்திரம் கொடுக்கபட்டு திருப்பாச்சி பட பாடலான கட்டு கட்டு கீர கட்டு என்ற பாடலுக்கு நடனம் ஆட சொல்லப்பட்டார்.  இதனை பார்த்த நடிகை திரிஷா " பிக்பாஸ்-ல் எதிர்பாராத விதமாக ஜானு. நிச்சயம் இந்த எபிசோடை பார்க்க வேண்டும்" என கூறியுள...

பிக்பாஸ் சீசன் 3 பெண் போட்டியாளர்களுக்கு கர்ப பரிசோதனை - வெளியேறிய போட்டியாளர் கூறிய பகீர் தகவல்

Image
தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருப்பவர்களின் நிஜமான முகங்கள் இப்போது தான் தெரிய வருகிறது. அதே போல, தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 3 சீசன் கடந்த 21-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டவர் நடிகை ஹேமா. இவர் அண்மையில் நிகழ்ச்சி குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில், பிக்பாஸில் உள்ள பெண் போட்டியாளர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா..? என்ற பரிசோதனை நடந்ததாக கூறி தெலுங்கு மக்களிடம் பரபரப்பை கிளப்பியுள்ளார். இதனை கேட்ட பலருக்கும் பிக்பாஸ் வீட்டில் சில மோசமான விஷயங்கள் நடக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் அதிரடி ப்ரோமோ வீடியோ - மாஸ் காட்டும் தல..!

Image
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், ‘அகலாதே...’ என்ற பாடலை கடந்த வாரம் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடியிருக்கிறார். பா.விஜய் பாடல் வரிகளை எழுத யுவனுடன் இணைந்து பிரித்வி பாடியிருக்கிறார். இந்த பாடல் கணவன் - மனைவிக்கு இடையேயான பாசம், காதல் மற்றும் புரிதலை விளக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்ய மொத்தம் 13 ப்ரோமோ வீடியோக்களை படக்குழு சென்சார் செய்து தயாராக வைத்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் மூன்று ப்ரமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ, ப்ரோமோ 1: ப்ரோமோ 2: ப்ரோமோ 3:

விஜய் ரசிகர் கத்தியால் தாக்கியதில் படு காயமடைந்த அஜித் ரசிகர் - மருத்துவமனையில் கவலைக்கிடம்

Image
நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே நடக்கும் சண்டை இன்று நேற்றல்ல என்பது அனவைருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், சமூக வலைதள சண்டைகள் சில நேரம் பொது வெளியில் கைகலப்பாக மாறிய சம்பவங்களும் நடந்துள்ளனர். ஆனால், நேற்று புழல் காவாங்கரையில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் நடந்துள்ள கத்தி சண்டை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முகாமில் வசித்து வரும் அஜித் ரசிகரான உமாஷங்கர் என்பவருக்கும், ரோஷன் என்ற விஜய் ரசியகருக்கும் விஜய்யா..? அஜித்தா.? என்ற விவாதம் நடந்துள்ளது. விளையாட்டாக ஆரம்பித்த இந்த விவாதம் விபரீதத்தில் முடிந்துள்ளது கொடுமை. ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர் உமா ஷங்கரின் பேச்சால் ஆத்திரம் அடைந்த ரோஷன் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து உமாசங்கரின் தலை, மார்பு பகுதியில் சரமாரி குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இரத்தவெள்ளத்தில் விழுந்து துடிதுடித்த உமாசங்கரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில்  ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகி...

அந்த நேரத்தில் விஜய் - அஜித் ரசிகர்கள் இதை செய்தால் என்ன..? - நடிகை கஸ்தூரி காட்டம்

Image
சமூக வலைதளங்களில் நடிகர்கள் விஜய், அஜித்தின் ரசிகர்கள் எல்லை மீறி சண்டையிட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் #RIPactorVijay , #ஆகஸ்டு8_பாடைகட்டு என்பது மாதிரியான ஹேஸ்டாக்கை உருவாக்கி டிரெண்ட் செய்தனர்.  இப்படி இரு நடிகர்களின் ரசிகர்களும், சமூக வலைதளங்களில் உப்புப் பெறாத விஷயத்தை வைத்து மோதிக் கொண்டிருப்பதற்கு, பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.  இந்நிலையில், சமூக பிரச்னைகளுக்கு தவறாமல் கருத்துச் சொல்லும் நடிகை கஸ்தூரி, இந்த விஷயத்துக்கும் தன்னுடைய கருத்தாக, டுவிட்டர் மூலம் பதிவிட்டிருக்கிறார்.  அந்தப் பதிவில் கஸ்தூரி கூறியிருப்பதாவது, தேவையில்லாத விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள், அந்த நேரத்தில் நல்ல காரியங்கள் செய்ய பயன்படுத்தினால், ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும். என்று காட்டமாக கூறியிருக்கிறார்.

கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் - ரசிகர்கள் கடும் விமர்சனம்

Image
தென் இந்திய அழகிப் போட்டியில் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் மீரா மிதுன். இவர் அழகிப் போட்டி நடத்துவதாகக் கூறி, பலரிடமும் பணம் பெற்றார். சொன்னபடி அதை செய்யவில்லை என்றதும், பணம் கொடுத்தவர்கள் அவர் மீது போலீசில் புகார் கொடுத்தனர்.  இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அழகி மீரா மிதும், பிக்பாஸ் சீசன் 3ல், போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு, மூன்று வாரங்கள் தாக்குப் பிடித்தார்.  தற்போது, அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.இந்நிலையில், எல்லோருக்கும் நன்றி தெரிவித்து அவர், டுவிட்டர் மூலம் பதிவிட்டிருக்கிறார்.  அதற்காக, தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படத்தை சேர்த்து வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவுக்காக, வலைத் தளப் பதிவர்களிடம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார் மீரா மிதுன். 

சரவணன் பேருந்து உரசல் சர்ச்சை - புனிதர் என்று கூறிய கமல்ஹாசன் நிலை என்ன..?

Image
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் மீரா மிதுன், இயக்குனர் சேரன் இடையிலான சர்ச்சையை குறும்படம் போட்டு தீர்த்து வைத்தார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன். அப்போது பேசிய சரணவன், பெண்களை உரசும் எண்ணத்தில் பேருந்துகளில் சென்றிருக்கிறேன் என்றார்.  ஆனால், கமல்ஹாசன் அதற்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக "சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார்" என கூறியிருந்தார். எதை சொன்னாலும் கை தட்டும் அந்த அரங்கில் இருக்கும் பார்வையாளர்கள். இதற்கும், கை தட்டினார்கள். என கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சை போய்க் கொண்டிருக்கிறது. 'மீ டூ' சர்ச்சை மூலம் பரபரப்பை ஏற்படுத்திய பின்னணிப் பாடகி சின்மயி இது பற்றி பதிவிட்டு அவருடைய கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்.  வழக்கம் போலவே, இதுவும் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து சரவணன் நேற்றைய நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்டார். சரவணன் மன்னிப்பு கேட்டதை அடுத்து, ஞாயிறு அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சரவணன் அப்படிப் பேசியதற்கு உடனே எந்த கண்டனத்தையும் தெரிவிக்காத கமல்ஹாசனை நோக்கி இந்த சர்ச்சை தற்போது திரும்பியுள்ளது.  அவர் இதற்காக...

"உசுரே போனாலும் மங்காத்தா 2 படத்தை எடுக்க விடமாட்டேன்" - பிரேம்ஜி திட்ட வட்டம்

Image
மங்காத்தா 2 படத்தை எடுக்க விடமாட்டேன் என்று நடிகர் பிரேம்ஜி ஒரு பேட்டி கூறியுள்ளார் .தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அஜித் கேரியரில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் இப்படத்தைச் சொல்லலாம்.  ஏனென்றால் மங்காத்தா முன் மங்காத்தா பின் என அஜித்தின் வளர்ச்சியைப் பிரித்து பார்த்தனர்.இந்நிலையில் இன்னும் அஜித் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இப்படத்தின் இரண்டம் பாகத்துக்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.  இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாத வெங்கட் பிரபு, அஜித்தை கடந்த மாதம் சந்தித்தாக கூறி புகைப்படம் ஒன்றை பதிவு செய்தார். அதைப் பார்த்த அஜித் ரசிகர்கள், ‘மங்காத்தா 2’ படம் உறுதியாகிவிடும் என்று எதிர்பார்த்தனர். இந்நிலையில் மங்காத்தா 2 படம் எடுக்கவிடமாட்டேன் என்று நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'மங்காத்தா படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் என்னை போட்டு தள்ளிவிடுவார்கள். எனவே மங்காத்தா 2 படம் எடுத்தால் அதில் என்னால் நடிக்க முடியாத ...

இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான கவர்ச்சியில் நடிகை சுரபி - புகைப்படங்கள் உள்ளே

Image
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமானவர் அழகுதேவதை சுரபி. அதன் பிறகு வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார். அழகும், திறமையும் இருந்தாலும் வாய்ப்புகள் ஏனோ சுரபிக்கு வரவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு புகழ் என்ற படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தார்.  அந்தப் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பிறகு தெலுங்கு சினிமாவிற்கு சென்று சற்று கவர்ச்சியை காட்டி தனக்கான இடத்தை பிடித்து விட்டார். அட்டாக், ஜென்டில்மேன், உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி இருக்கிறார்.  அடங்காதே என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்து வரும் சுரபி. தெலுங்கு, தமிழில் தயாராகி உள்ள குறள் 388 என்ற படத்திலும் நடித்துள்ளார். இதில் விஷ்ணு மஞ்சு ஹீரோ. ஜி.எஸ்.கார்த்தி இயக்கி உள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  தெலுங்கில் வோட்டர் என்ற தலைப்பில் வெளியாகும் குறள் 388, திருவள்ளுவர் எழுதிய குறளில் 388-வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஒருபாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி நடி...

காஜல் அகர்வாலுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு 75 லட்ச ரூபாயை இழந்த தொழிலதிபரின் மகன்..!

Image
நடிகை காஜல் அகர்வால் மீது கொண்ட ஆசையினால் தொழிலதிபரின் மகன் ஒருவர் 75 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதாபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் ஓருவர் LOCANTO என்ற இணையதளத்தில் இருந்த ஒரு விபசார ப்ரோக்கரை தொடர்பு கொண்டுள்ளார்.  அவனும் காஜல் அகர்வால் வேண்டுமென்றால் நாங்கள் உங்கள் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், புக்கிங் கட்டணமாக 50ஆயிரம் ஆகும் என்றும் ஆனால், நீங்கள் 25 ரூபாய் செலுத்தினால் போதும் கூடவே உங்கள் விலாசத்தை உறுதி செய்ய ஆதார் அட்டையை அனுப்புங்கள் எனவும் கூறவே தொழிலதிபரின் மகனும் 25 ரூபாயை அந்த ப்ரோக்கர் அனுப்பிய வங்கி கணக்கில் போட்டுள்ளார்.  மேலும், தன்னுடைய ஆதார் அட்டையையும் குறிப்பிட்ட வாட்சப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார். தொடர்ந்து, ஆதார் அட்டையில் இருந்த விலாசத்தை பார்த்து அந்த இளைஞர் மிகப்பெரிய தொழிலதிபரின் மகன் என தெரிந்து கொண்ட அந்த ப்ரோக்கர் இவர் தங்க முட்டையிடும் வாத்து என அறிந்து கொண்டார்.  தொடர்ந்து, காஜல் அகர்வாலுடன் அந்த தொழிலதிபரின் ம...

மாநாடு படம் தொடங்காமல் இருப்பப்தற்கு இது தான் காரணம் - இவரு திருந்த மாட்டாரு போலயே..?!?!?

Image
நடிகர் சிம்பு நடித்த செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படம் ரிலீஸ் ஆனது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.  இப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இதையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்கப்போவதாக கடந்த 2018 ஆண்டே அறிவிப்பு வெளியானது.  படத்தை 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்த படத்திற்காக நடிகர் சிம்பு உடலைக் குறைத்து, தற்காப்புக் கலைகளை கற்றுக்கொண்டிருந்தார்.  ஆனால், ரிலீஸ் என்று கூறிய ஜூன் மாதம் கடந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் படத்தின் படப்பிடிப்பே தொடங்காமல் கிடக்கிறது.  தற்போது, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில் "முஃடீ" படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடித்து வருகிறார். ஆனால், சமீபத்தில், படத்தின் ஷூட்டிங்கில் தயாரிப்பாளருடன் சிம்புவுக்கு கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் நடிக்காமல் சிம்பு வெளிநாட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டாராம்....

40 வயதான நடிகர் பிரேம்ஜி-க்கு திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து

Image
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி. இவர் கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோரனும் ஆவார். வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களில் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு நீண்ட நாட்களாக பெற்றோர்களும், நண்பர்களும் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்கள்.  தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு நிற்கும் புகைப்படத்துடன் கேம் ஓவர் என்று எழுதப்பட்ட டி.சர்ட்டை போட்டு பதிவு செய்திருக்கிறார். பிரேம்ஜிக்கு பெண் கிடைத்து விட்டது என்றும், திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் ரசிகர்கள் கமண்ட்டில் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் ஆச்சரியத்துடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 🤙🤙🤙 pic.twitter.com/64J28ia3dq — PREMGI (@Premgiamaren) July 30, 2019

ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் மெலிந்த கீர்த்திசுரேஷ் - ஏன் இந்த கோலம்..? - ரசிகர்கள் அதிர்ச்சி

Image
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ, தனுஷூடன் தொடரி, விஜய் உடன் சர்கார் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷுக்கு நடிகையர் திலகம் பெரும் வரவேற்பைக் கொடுத்தது. அந்தப் படத்தில் அவர் நடிகை சாவித்ரியாகவே வாழ்ந்து தனது திறமையை நிரூபித்திருந்தார்.  மீண்டும் தற்போது ஹீரோயினை மையப்படுத்திய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தநிலையில் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா, கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கும் படத்தை இயக்குவதாகவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். பொசு பொசுவென இருந்த இவர் உடல் எடை குறைகிறேன் பேர்...

இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம் - என்ன காரணம்..?

Image
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன்-2' இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.  அதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளனர். இதற்கிடையில் சமீபத்தில் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் , ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தனர்.  இந்நிலையில் தற்போது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான லொகேஷனுக்காக இயக்குனர் சங்கரும் அவரது குழுவினரும் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கான படக்காட்சிகள் ஐதராபாத்தில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ள படக்குழுவினர் அங்குள்ள கடைவீதி ஒன்றை பார்வையிட்ட புகைப்படங்ககள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு முதலில் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் தான் ஒப்பந்தம் ஆனார்.  ஆனால் அவர் தற்போது வெளியேறிவிட்டதால், அவருக்கு பதிலாக இப்போது ரத்னவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரத்னவேல் இதற்கு முன்பு ஷங்கரின் எந்தி...

முழு நிர்வாணமாக நடிகை பிந்து மாதவி - ரசிகர்கள் ஷாக்..!

Image
தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை பிந்துமாதவி, தமிழில் கழுகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.  பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான நடிகையாகவும் மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது கழுகு 2 படத்தில் நடித்துள்ளார் பிந்துமாதவி.  சத்ய சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1-ல் பாதியில் வைல்ட் கார்டு முறையில் கலந்து கொண்டார் நடிகை பிந்து மாதவி. பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் முன்னணி நடிகைகள் நடிப்பது ஆரோக்கியமான ஒன்று.  சமீபத்தில், இவர் அளித்துள்ள பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மக்களிடம் எனக்கு அதிகமான அங்கீகாரம் கிடைத்துள்ளது. நடிகை அமலாபால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆடை திரைப்படம் குறித்து விமர்சங்களை கேள்விப்பட்டேன்.  வழக்கமாக ஹீரோயினாக இல்லாமல் துணிச்சலான பெண்ணாக அமலாபால் நடித்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. கதைக்கு தேவைப்பட்டால் ந...

சியான் விக்ரமின் உடன் பிறந்த தம்பியை பார்த்துள்ளீர்களா..? - இதோ வைரல் புகைப்படம்

Image
சினிமாவில் நுழைந்த உடனே யாருக்கும் வெற்றி கிடைத்து விடாது. அப்படி பல தடைகளை தாண்டி கடின உழைப்பால் இப்போது உலகம் முழுவதும் ரசிர்களை பெற்றுள்ளவர் நடிகர் சியான் விக்ரம். இவருடைய தம்பி அரவிந்த் ஜான் விக்டர் புதிதாக தயாராகும் ‘எப்போ கல்யாணம்’ என்ற படத்தில் வில்லனாக அவர் நடிக்கிறார். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.இருதயராஜ் டைரக்டு செய்கிறார். சாண்ட்ராமிக்சல், கேபிரியல், லாவண்யா, பூஜா ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.  ரஞ்சித்குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்னமாலா, வினய்பிரசாத், ஐவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை, பெங்களூருவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தை ஷைலா, டாக்டர் கீர்த்தவணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.  இவருடைய புகைப்படம்iஇணையத்தில் வெளியாகி முதன் முறையாக வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்,   

90'ஸ் கிட்ஸ்களின் உயிர்மூச்சு சக்திமான் - இப்போது எப்படி இருக்கிறார்..? என்ன செய்து கொண்டிருக்கிறார்..?

Image
90-களில் வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி பெட்டி இருக்கிறதோ இல்லையோ. நிச்சயம் சக்திமான் ஸ்டிக்கர்கள் சுவர், பீரோ, ஜன்னல் என எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கும். சக்திமான் பெயரைச் சொல்லியே பல பிராண்டுகள் கல்லாக் கட்டிக் கொண்டிருந்தன.'சக்தி சக்தி சக்திமான்' என்று வாராவாரம் தூர்தர்ஷனில் தோன்றி அனைவரையும் மகிழ்வித்த தொடர் சக்திமான். அக்காலத்தில் இந்தத் தொடரை விரும்பாத குழந்தைகளே இல்லை எனலாம். அந்தளவிற்கு சுண்டுவிரலால் அனாயசமாக பூமி, சூரியனைத் தூக்கி சிறுவர்களை சக்திமான் குஷிப்படுத்தினார்.  ஆனால், இந்த தொடர் ஏற்படுத்திய தாக்கத்தால் உயரமான கட்டடங்களில் இருந்து தன்னை சக்திமான் காப்பற்ற வருவார் என குதித்து இறந்த சிறுவர்களின் சோகக்கதையும் உள்ளது. மீண்டும் சக்திமான் தொடரை எடுக்க விரும்புகிறீர்களா..? என முகேஷ் கண்ணாவிடம் கேட்டால் இப்போது உள்ள டெக்னாலஜியை வைத்து பாகுபலிக்கே சவால் விடுற அளவுக்கு சக்திமானுக்கு புதுப்புது விஷயங்கள்ல அப்டேட் ஆகணும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா, நிச்சயம் சக்திமான் ரீ-எண்ட்ரி கொடுப்பான் என்கிறார்.  தற்போது, அகில இந்திய...

வாரிசு ஹீரோவின் படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதி - காரணம் இது தான்..!

Image
தமிழ்த் திரையுலகத்தில் வித்தியாசமான நடிகர் எனப் பெயர் வாங்கிய விஜய் சேதுபதி, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'சை ரா' படத்தின் மூலம் அங்கு அறிமுகமாக உள்ளார்.  அந்தப் படத்தை அடுத்து சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமாக உள்ள 'உப்பெணா' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது அந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டாராம்.  அவரே படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத்' ஆகிய படங்கள் வியாபார ரீதியாக தோல்வி அடைந்ததால் தமிழில் மட்டும் தற்போதைக்கு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்.  மலையாளத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மார்க்கோனி மத்தாய்' படமும் மிகப் பெரும் தோல்வி அடைந்தது. இதனால், கடும் அப்செட்டில் உள்ளார் விஜய் சேதுபதி. இப்படி தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், உடனடியாக ஒரு ஹிட் படம் கொடுத்து தன்னை நிலைநிறுத்தி கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் விஜய்சேதுபதிக்கு ஏற்பட்டுள்ளது. அவர் விலகிய தெலுங்கு படத்திற்கு தற்போது விஜய் சேதுபதிக்க...

ஹன்ஷிகாவின் மாமியார் இவங்களா..? - ரசிகர்கள் ஷாக்..!

Image
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா, திருமணம் செய்த பின்னர், கேரக்டர் நடிகையாக மாறிவிட்டார். சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.  தற்போது தனுஷின் பட்டாஸ், துல்கர்சல்மானின் வான் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருபவர், தற்போது ஒரு தமிழ்ப்படத்தில் ஹன்சிகாவின் மாமியார் வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.  அதற்காக சற்று முதிர்ச்சியான கெட்டப்பிலும் அவர் தோன்றுகிறாராம். நடிகை ஹ்னஷிகாவுகும் சினேகாவுக்கும் 10 வயது தான் வித்தியாசம். ஆனால்,ஹன்ஷிக்காவுக்கு மாமியாராக சினேகா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

பட வாய்ப்புக்க படு சூடான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ள நடிகை ஸ்ரேயா சரண்..! - வைரல் புகைப்படங்கள்

Image
‘எனக்கு 20 உனக்கு 18‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரன். அதையடுத்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘மழை’ படத்தில் நடித்தார்.  அதையடுத்து ரஜினிக்கு ஜோடியாக ‘சிவாஜி’ படத்திலும், தனுஷுக்கு ஜோடியாக ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்திலும் நடித்து பிரபலமானார். இதையடுத்து அவர் பல படங்களில் நடித்தார். இடையில் அவருக்கு வாய்ப்பு குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார் நடிகை ஸ்ரேயா.  திருமணத்துக்குப் பிறகு நடிகை ஸ்ரேயா தற்போது தெலுங்க படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் வாய்ப்பு தேடுவதற்காக போட்டோஷுட் நடித்தியுள்ளார்.  திருமணம் ஆன பிறகும் உடற்கட்டு குலையாமல் இளைமாயாகவே இருக்கிறார் ஸ்ரேயா சரண். இந்த போட்டோ சூட்டில் நீச்சல் குளத்தில் நின்றபடி டு கவர்ச்சியாக காட்சியளிக்கிறார். தற்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

நீச்சல் உடையில் லிங்கா பட நடிகை - திட்டிய ரசிகர்களுக்கு பதிலடி - புகைப்படம் உள்ளே

Image
பாலிவுட் நடிகை சோனக்‌ஷி சின்ஹா நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை கண்டு பல ரசிகர்கள் அவரை கேவலமாக திட்டி வருகின்றனர். சோனக்‌ஷி வெளியிட்ட புகைப்படத்தில் நீச்சல் உடை அணிந்துள்ளார்.  இந்திய வம்சாவழியை சேர்ந்த இவர் இந்திய கலாச்சாரத்தை கெடுக்கிறார் என்ரெல்லாம் திட்டினர். இதற்கு சோனக்‌ஷி பின்வருமாரு பதில் அளித்துள்ளார். நான் குண்டாக இருந்த போது என் உடையை பார்த்து கிண்டல் செய்தார்களே நான் என்ன என் உடல் தெரியும்படியாகவா இருக்கிறேன்.  உடல் பாகங்கள் தெரியும்படி நான் உடை அணிய மாட்டேன். என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பற்றி பேசுகிறார்களே அதே ஆட்கள்தான் இன்ஸ்டாகிராமில் வெளிநாட்டு நடிகைகளின் பிகினி புகைப்படங்களுக்கு லைக் போடுகிறீர்கள்.  பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் நான்கவர்ச்சியாக உள்ளது போல் இருக்கலாம். ஆனால் நான் நீச்சல் உடையை அணிந்திருக்கிறேன். எனவே, தேவையில்லாமல் பேசாதீர்கள் நன்றாக பார்த்துவிட்டு பேசுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.