படவாய்ப்புக்காக படுக்கை தீயாய் பரவும் சீரியல் நடிகை வீடியோ! புகாரின் பேரில் ஒருவர் கைது!
சென்னை வடபழனியைச் சேர்ந்த சீரியல் நடிகையிடம் சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசைகாட்டி பணம் மற்றும் நகைகளைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷேக் முத்தலிப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக, அந்த நடிகையிடம் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அவரை அணுகிய இவர், பின்னர் அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதனைப் படம் மற்றும் வீடியோவாக எடுத்து வைத்து தொடர்ந்து மிரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மிரட்டலின் மூலம் சுமார் 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 11 தவணி நகைகள் வரை பெற்றுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் புகாரளித்த சீரியல் நடிகை, சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர். அவரது நண்பியின் மூலம் தான் ஷேக் முத்தலிப் உடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் இவர், “சினிமாவில் நடிக்க வைத்துவிடுவேன்” என்று ஆசை வார்த்தைகள் கூறி நடிகையை அணுகியுள்ளார். அதன் பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து, செல்போனில் வீடியோ எடுத்து வைத்து தொடர்ந்து மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. பயத்தால் முதலில் புகார் அளி...