Posts

Showing posts with the label alcohol demand

முதலிரவில் சரக்கு கேட்டு டார்ச்சர் செய்த புதுமணப்பெண்.. ரெண்டே நாளில் அரங்கேறிய கொடூரம்..

Image
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த 32 வயது தமிழ்வாணன், திருமணக் கனவுடன் பல ஆண்டுகளாக பெண் தேடி அலைந்தார். சொந்த வீடு இல்லை, வயது அதிகம், உடல் பருமன் என பல காரணங்களால் பெண் வீட்டார் அவரை நிராகரித்தனர். ஆனாலும், நம்பிக்கையை இழக்காத தமிழ்வாணன், உறவினரான சேலத்தைச் சேர்ந்த திருமண புரோக்கர் மகேஷ் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தது.கடந்த ஏப்ரல் 14 அன்று, மகேஷ் தமிழ்வாணனையும் அவரது குடும்பத்தையும் விருதுநகர் முருகர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு, மற்றொரு புரோக்கர் கமலா மூலம் மேட்டூரைச் சேர்ந்த சிவா என்ற புரோக்கர் அறிமுகமானார். காலை 11 மணியளவில், 36 வயது பூஜா என்ற பெண்ணை தமிழ்வாணனுக்கு அறிமுகப்படுத்தினர். பெண்ணைப் பிடித்துப்போன தமிழ்வாணன், திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனால், புரோக்கர்கள் 2 லட்சம் ரூபாய் கேட்டனர். பேரம் பேசி, 1.5 லட்சமாக முடிவானது. தமிழ்வாணன் குடும்பம் 1.35 லட்சம் ரூபாயை உடனடியாகக் கொடுத்து, மீதி 15,000 ரூபாயை சென்னை சென்று தருவதாக உறுதியளித்தனர். அன்று மாலையே, பூஜாவுக்கு பட்டுச் சேலை வாங்கிக் கொடுத்து, முருகர் கோயிலில் திருமணம் நடந்தது. சென்னைக்குத் திரும்பிய தமிழ்வாணன், புது வாழ்...