Posts

Showing posts with the label family missing

மகனுக்கு பெண் பார்க்க போவதாக கூறி பக்கத்து வீட்டாரிடம் பெண் செய்த செயல்! தெரியவந்த உண்மை..

Image
மதுரை மாநகராட்சி அவனியாபுரம் எஸ்.கே.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த கவிதா தென்னரசு தம்பதியினர் (கணவர் தென்னரசு) மற்றும் அவர்களது மகன்கள் ராம் கணேஷ் பாண்டியன், கார்த்திகேயன் ஆகிய நான்கு பேர் கடந்த புதன்கிழமை (ஜூன் 17) முதல் காணாமல் போயுள்ளனர். அவர்களது நான்கு செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் உள்ளன. கவிதா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் தீபாவளி சீட்டு மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை நடத்தி வந்தார். இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் அவரை நம்பி தவறாமல் பணம் கட்டி வந்தனர். 20 ஆண்டுகளாக அந்தப் பகுதி பெண்களுடன் நெருக்கமாகப் பழகிய கவிதா இப்படி ஒரு செயலைச் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மோசடி எப்படி நடந்தது? கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கவிதா அந்தப் பகுதி பெண்களைத் தனித்தனியாகச் சந்தித்தார். தனது மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்திருப்பதாகவும், அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று திருமண பேச்சு வார்த்தை நடத்தி நிச்சயத்திற்கு நாள் குறிக்க வேண்டும் என்றும், அதற்காக அணிந்து செல்ல தங்க நகைகள் தேவை என்றும் கூறினார். இதனால் 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் தலா...