Posts

Showing posts with the label Jagee John

பிரபல தொலைக்காட்சி நடிகை மர்ம மரணம் - கடைசி பேஸ்புக் பதிவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்..!

Image
கேரளாவை சேர்ந்த பிரபல மாடல் மற்றும் தொலைக்காட்சி நடிகையான "ஜாகி ஜான்" வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவர் மாடல் மட்டுமின்றி தொலைகாட்சி நடிகை என்பதால் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவராக இருந்தார். ரோஸ்பவுல் என்ற தொலைக்காட்சியில் ஜாகிஸ் குக்புக் என்ற ஷோவையும் நடத்தி வந்தார்.  அவர் திருவனந்தபுரத்தில் குறவன்கோனம் பகுதியில் அவரது அம்மாவுடன் ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று நடிகை ஜாகி ஜான்  தனது பிளாட்டின் சமயலறையில் இறந்து கிடந்தார்.  இவருடைய, இறப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் அக்டிவாக இருக்கும் அவர், நேற்று காலை கூட முகநூலில் ஒரு பதிவை போட்டுள்ளார். "2019-ம் ஆண்டில் நீங்கள் வடித்த கண்ணீர். 2020-ற்கான உங்கள் விதைகள் வளர்க்க உதவும்" என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.