கழிவறையில் ரகசிய கேமரா! இளம் நடிகையை வீடியோ எடுத்த இன்ஸ்டா கும்பல்! இறுதியில் நடந்த அசிங்கம்!
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நட்சத்திர பெண்கள் கிரிக்கெட் தொடரில் (Celebrity Women Cricket Tournament) பங்கேற்ற ஒரு கன்னட தொலைக்காட்சி நடிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு பெண்களின் பாதுகாப்பு குறித்த கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெங்களூருவின் கோரமங்களா இன்டோர் ஸ்டேடியத்தில் (Koramangala Indoor Stadium) நட்சத்திர பெண்கள் கிரிக்கெட் தொடர் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சினிமா, தொலைக்காட்சி துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், ரியாலிட்டி ஷோ போட்டியாளர்கள், சமூக வலைதள நட்சத்திரங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டனர். இத்தொடரில் கங்கா கிளாடியேட்டர்ஸ், காவேரி குயின்ஸ், ஏஞ்சல்ஸ், டோலிவுட் டைனமோ யமுனா யோதாஸ் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நதிகளின் பெயர்களைத் தாங்கிய 10 அணிகள் பங்கேற்றன. மூன்று நாட்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான தொடரின் இறுதிப்போட்டியில் ஷராவதி சக்திஸ் (Sharavathi Shaktis) அணி அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற 32 வயதான கன்னட தொலைக...