“பயன்படுத்திய ஆணுறையை வைத்து கல்லூரி ஆசிரியை செய்த கொடூரம்” சிக்கிய 19 வயசு மாணவன்! பகீர் சம்பவம்!
விக்ரம் என்ற பெயரைத் தாங்கி வந்த அந்தப் பையன், NEET-இல் 635 மதிப்பெண்கள் எடுத்து கொல்கத்தாவின் ஒரு பிரபல மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது, வீட்டில் அம்மா அழுதாள். அப்பா தோளில் கை வைத்து “இனி உன் வாழ்க்கை உன்னோடது” என்றார். அந்த வார்த்தைகள் விக்ரமுக்கு அன்று மிகப் பெரிய சுமையாகத் தெரிந்தன. (இது 2025-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக எழுதப்பட்ட கிரைம் கதை. பாதிக்கப்பட்டவர்களின் வலி கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) முதல் ஆண்டு. அறை தோழர்கள் பெரும்பாலும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள். அவர்கள் வார இறுதியில் பார், மால், டிரைவ் என்று குதூகலித்தனர். ஆனால், விக்ரம் ஹாஸ்டல், ஜிம், லைப்ரரி என மூன்று இடங்களுக்குள் சிக்கினான். அவனால் கூடுதல் செலவுகளை செய்ய முடியாது. அதற்கு, பணமில்லை. அந்தக் கல்லூரியில் அனஸ்தீசியா துறையில் விரிவுரையாளராக இருந்தார் டாக்டர் ஸ்ருதி மேனன். வயது 34. முகத்தில் இன்னும் இளமை இருந்தாலும், கண்களில் ஒரு வெறுமையும், விரக்தியும் தெரிந்தது. அவர் வகுப்பில் பேசும்போது மாணவர்கள் அமைதியாகக் கேட்பார்கள். ஆனால் விக்ரமை மட்டும் அவர் அடிக்கடி பார்ப்பதாக அவனுக்குத் தோன்றியது. ...