மீண்டும் ஒரு புது வீடு... யாருக்காக? அதீத வளர்ச்சி அடைந்த அனிதா சம்பத்!
அனிதா சம்பத்: செய்தி வாசிப்பாளினியாக தனது வாழ்க்கை பயணத்தை துவங்கிய அனிதா சம்பத் பிரபலமான ஹீரோயின் ரேஞ்சிற்கு ஃபேமஸ் ஆகிவிட்டார். இவர் செய்தி தொகுப்பாளினியாக இருந்து வந்தபோது திடீரென சமூக வலைதளங்களில் இவரது வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார். அனிதா சம்பத் பாலிமர், நியூஸ் 7 ,தமிழன், சன் தொலைக்காட்சிகளில் உள்ளிட்டவற்றில் பணியாற்றி இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் காலையில் ஒளிபரப்பாகப்படும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பணியாற்றியதன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டார். திரைப்படங்கள்: இது தவிர அவர் சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களை பணியாற்றி இருக்கிறார். "எமர்ஜென்சி" என்ற வலைத்தொடரிலும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனிடையே அனிதா சம்பத் சமூக வலைதளங்களில் திடீரென டிரெண்டானதால் அவர் மிகப்பெரிய ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒரே நைட்டில் பேசப்பட்டார். 2.0,ஆதித்ய வர்மா , தர்பார், இரும்பு மனிதன், தேனி உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது . தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்...