கொத்தடிமை, 200 ரூவா, உபி, என விஜய் சேதுபதியை விமர்சனம் செய்யும் விஜய் ரசிகர்கள்! என்ன நடந்தது?
பிக் பாஸ் தமிழ் 10 வார இறுதி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய தலைமைத்துவக் கருத்துகள், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. வீட்டுக்குள் நடந்ததைச் சொன்னாரா, அல்லது வெளியே நடக்கும் அரசியலைக் குறிப்பிட்டாரா என்ற கேள்வி இப்போது பரவலாக எழுந்துள்ளது. பிக் பாஸ் தமிழ் 10 செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கியது. முதல் வாரத் தலைவராக ஷதிகா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சில நாள்களிலேயே வீட்டுக்குள் அவரது முடிவுகள் குறித்து கேள்விகள் எழுந்தன. ஜனநாயக அறை விவாதத்தில் எதிரணியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஷதிகா பின்னர் தலைவர் பொறுப்பை விட்டு விலகினார். இந்தப் பின்னணியில் நடைபெற்ற வார இறுதி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தலைவர் பொறுப்பைப் பற்றி பேசினார். பொறுப்பு கொடுக்கப்பட்டபோது அதற்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து எதிரணியினர் மீது புகார் சொல்லிக்கொண்டே இருப்பது தலைவருக்கான தகுதி அல்ல என்றும் குறிப்பிட்டார். வாக்குறுதிகளை யோசிக்காமல் கொடுப்பது, பிரச்சினை வரும்போது பின்வாங்குவது, பிறகு எதிரணியைக் குற்றம் சொல்வது ஆகியவை தலைமைக்கு உரிய பண்புகள் அல்ல என்பதே அவரது கருத்...