Posts

Showing posts with the label Action

யப்பா.. இதாண்டா படம்.. முதல் 30 நிமிஷம்.. தெறிக்கவிட்ட ரஜினி.. லோகேஷ் வைத்த TWIST.. #Coolie_Review

Image
பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தனது யூடியூப் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்தின் விமர்சனத்தை உற்சாகமாக பகிர்ந்துள்ளார். முதல் நாள் முதல் காட்சியை நகரி திரையரங்கில் கண்டு ரசித்த அவர், இப்படம் 100 நாள் ஓடக்கூடிய மாபெரும் வெற்றி படமாக அமையும் என உறுதியாக தெரிவித்தார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படத்தின் முதல் காட்சி திரையரங்குகளில் திருவிழாக் கூட்டத்தை ஈர்த்து, ரசிகர்களின் கொண்டாட்டத்தால் அதிர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். படத்தின் கதை: மர்மமும் திருப்பமும் நிறைந்த பயணம் ‘கூலி’ படத்தின் கதை சென்னை ராயப்பேட்டையில் ஒரு மேன்ஷனை மையமாகக் கொண்டு நகர்கிறது. இந்த மேன்ஷனின் உரிமையாளரான தேவா (ரஜினிகாந்த்), தனது நண்பரான சத்யராஜுடன் இணைந்து கதையில் முக்கிய பங்கு வகிக்கிறார். சத்யராஜ் ஒரு கட்டத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, அவரது மகளாக வரும் ஸ்ருதி ஹாசன், தேவாவை குற்றம்சாட்டி வெளியேறுமாறு கூறுகிறார். இதனைத் தொடர்ந்து, தனது நண்பனின் மரணத்திற்கு பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்க தேவா ஒரு தீவிரமான பயணத்தை மேற்கொள்கிறார். கதை மேலும் விசாகப்பட்டினத்தின் துறை...

‘வெறித்தனம்..’ இது தேவையில்லாத ஆணி.. “கூலி” படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்

Image
சென்னையில் மேன்ஷன் நடத்தி வரும் தேவா (ரஜினிகாந்த்), கடுமையான விதிகளுடன் தன் வாழ்க்கையை நடத்துகிறார். குடிக்கக் கூடாது, கண்ட சேனலைப் பார்க்கக் கூடாது, பர்சனல் போன் பயன்படுத்தக் கூடாது, ரூம் நம்பர் 114-ஐ அணுகவே கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள். இந்நிலையில், அவரது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) விசாகப்பட்டினத்தில் மர்மமான முறையில் இறக்கிறார். ராஜசேகரின் மகள்கள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்) மற்றும் அவரது தங்கைகளுக்கு ஆதரவாக நிற்கும் தேவா, இந்த மரணம் ஒரு கொலை என்பதை அறிந்து, கொலையாளியைக் கண்டுபிடிக்க களமிறங்குகிறார். விசாகப்பட்டினம் துறைமுகத்தை கட்டுப்படுத்தும் சைமன் (நாகர்ஜூனா) இதில் ஏதோ தொடர்புடையவர் எனத் தெரிகிறது. கடத்தல் தாண்டி மர்மமான செயல்களில் ஈடுபடும் சைமனை கண்காணிக்க காவல்துறையும் உளவாளிகளை அனுப்புகிறது. ராஜசேகரை கொன்றது யார்? துறைமுகத்தில் உண்மையில் நடப்பது என்ன? இதுதான் மீதிக்கதை. படத்தின் பலங்கள்: ரஜினிகாந்த் இப்படத்தின் முதுகெலும்பு. 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் மாஸ் மன்னனாக விளங்கும் அவரது ஆளுமை இன்னும் மங்கவில்லை. நண்பனின் இழப்புக்கு வருந்துவது, எதிரிகளை பந்தாடுவது, கலகலப்பான...

ஆக்‌ஷன் திரைப்படம் இத்தனை கோடி நஷ்டம் - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர்..!

Image
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்துள்ளது. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது என்று கூறுகிறார்கள்.  வழக்கமாக காமெடி கலந்த கமர்ஷியல் படங்கள் இயக்கும் சுந்தர் சி, இந்த முறை முழுக்க ஆக்க்ஷன் காட்சிகளுடன் படம் இயக்கியிருந்தார். ஆனால், இந்த முயற்சிஅவருக்கு வொர்க்-அவுட் ஆகவில்லை. இந்நிலையில், ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பளார் கே.ராஜன் நடிகர் விஷாலை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.  அவர் பேசியதாவது, ஆக்ஷன் படத்தால் 16 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், வெளியான அயோக்யா படத்தால் 9 கோடி நஷ்டம் ஏற்பட்டது. பல தயாரிப்பாளர்களை விஷால் காலி பண்ணிட்டார் என்று கூறியுள்ளார்.

மோசமான விமர்சனங்களை பெற்ற ஆக்‌ஷன் , சங்கத்தமிழன் ஆகிய படங்களின் ஒரு வார வசூல் விபரம்..!

Image
நடிகர் விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் திரைப்படம் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத்தமிழன் திரைப்படம் ஆகிய இரண்டு படங்களும் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியாகின. சொல்லிக்கொள்ளும்படியான எதிர்பார்ப்புடன் வெளியாகிய இரண்டு படங்களும் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்து எதிர்பார்த்த வர வேற்பை பெறாமல் பெற முடியாமல் திணறின.  ஆனால், திரையிட்ட இடங்களில் எல்லாம் நல்ல வசூல் வருவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் மட்டும் இந்த படங்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்ற விவரம் இதோ, ஆக்ஷன்- ரூ. 1.07 கோடி சங்கத் தமிழன்- ரூ. 1.08 கோடி சமீபகாலமாக வெளியான் விஜய் சேதுபதி படங்களிலேயே இந்த படம் தான் மிக மோசமான வசூல் செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.