மதராஸி "திரைவிமர்சனம்" விமர்சகர் இட் இஸ் பிரசாந்த்தை கழுவி ஊத்தும் ரசிகர்கள்
பிரபல திரைப்பட விமர்சகர் பிரசாந்த், சமீபத்தில் வெளியான மதராஸி திரைப்படத்திற்கு அளித்த விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய இந்தப் படத்தை, பிரசாந்த் தனது விமர்சனத்தில் ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளியதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், படத்தின் கதை, திருப்பங்கள், எதிர்பார்ப்பு, அல்லது சென்டிமென்ட் காட்சிகள் எதுவுமே தெளிவாக இல்லை என விமர்சித்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரசாந்த் தனது விமர்சனத்தில் மதராஸி படத்தின் குறைகளை வெறும் அரை நிமிடத்திற்கும் குறைவாகவே பேசியதாகவும், மற்ற நேரங்களில் படத்தை அளவுக்கு மீறி புகழ்ந்ததாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் காதல் காட்சிகளை பாராட்டிய பிரசாந்த், படத்தின் திரைக்கதையில் உள்ள பலவீனங்களை பெரிதாக கவனத்தில் கொள்ளவில்லை என்பது ரசிகர்களின் முக்கிய புகார்.இதற்கு மாறாக, சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தை பிரசாந்...