என்ன கண்றாவி இது....? இதை எதிர்பாக்கவே இல்ல.. கழுவி ஊத்திய ரசிகர்கள்.. பிரவீனா பதில்..!
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் தனது தனித்துவமான நடிப்பால் பிரபலமான நடிகை பிரவீனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ஒரு தமிழ் சீரியலில் தான் நடித்த கொடுமையான மாமியார் கதாபாத்திரத்திற்கு மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்ததாகவும், இதனால் தான் அந்த சீரியலில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவித்தார். பிரவீனா கூறுகையில், "நான் நடித்த ஒரு கதாபாத்திரத்திற்கு மிகவும் மோசமான கருத்துக்கள் வந்தன. அந்த கதாபாத்திரம் தொலைக்காட்சியில் கொடுமையான மாமியாராக சித்தரிக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் தாமதமாகவே புரிந்தது. நிஜ வாழ்க்கையில் நான் அமைதியான, சாதுவான குணம் கொண்டவள். வில்லத்தனமான மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு தெரியாது. ஆனால், இயக்குநர்கள் இது ஒரு கண்டிப்பான கதாபாத்திரம் மட்டுமே, வில்லி கதாபாத்திரம் இல்லை என்று நம்பவைத்து என்னை நடிக்க வைத்துவிட்டனர்," என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும், "சீரியல் ஒளிபரப்பான பிறகு, ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்கள் வந்தன. 'இது நீங்களா? உங்களிடமிருந்து இப்படி எதிர்பார்க்கவில்லை' என்று பலரும்...