ட்ரம்மில் மிதந்த குழந்தை! CCTV-யில் சிக்கிய குலைநடுங்க வைக்கும் காணொளி!
கடப்பா : 4 வயது சிறுமி தண்ணீர் டிரம்மில் மூழ்கி உயிரிழப்பு - அண்டை வீட்டு பெண் கைது ஆந்திரப் பிரதேசம், கடப்பா மாவட்டம், லோப்பனுட்டலா கிராமத்தில் சோக சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி நித்திவிக்கா திடீரென மாயமானார். அவரைத் தேடிய தாயார் சுருஜனா, இறுதியில் வீட்டருகே இருந்த தண்ணீர் டிரம்முக்குள் சிறுமியின் உடல் மிதந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். முதலில் இது விபத்து எனக் கருதி வழக்குப் பதிவு செய்த போலீசார், பின்னர் விசாரணையை தீவிரப்படுத்தினர். சிறுமியின் தாயார் சுருஜனாவுக்கும், அவர்களுக்கு அருகிலேயே வசிக்கும் சுவாதி என்பவருக்கும் இடையே முன்பிருந்தே தகராறு இருந்து வந்ததாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி உயிரிழந்த பகுதியில் சுவாதி நடமாடியதைக்...