Posts

Showing posts with the label CCTV gated community concern

கட்டு கட்டாக சலவை நோட்டு, குவியல் குவியலாக தங்க நகை, திருட்டு நடந்தது எப்படின்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Image
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் பகுதியில் உள்ள விஐபி கார்டன் குடியிருப்பில், பிரபல யூடியூபர் வினோத்குமார்–மதுமிதா தம்பதியினர் வீட்டில் நேற்று இரவு கொள்ளை நடந்தது. மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, 118 சவரன் தங்க நகைகளையும் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஐபி கார்டன் பகுதியில் பல்வேறு தரப்பினர் புதுமனை வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். சுற்றுவட்டாரத்தை தனியார் காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இங்கு வசித்து வந்த வினோத்குமார்–மதுமிதா தம்பதியினர், தங்களது யூடியூப் சேனலில் அதிக அளவு நகைகள் மற்றும் கட்டுகட்டுப் பணத்துடன் இடம்பெற்ற வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். நகைக்கடைக்குச் சென்று நகை வாங்கும் விலாக் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவேற்றி வந்தனர். அந்த வீடியோக்களில் எங்கு செல்கிறார்கள், எவ்வளவு நகை வாங்குகிறார்கள், காரின் மதிப்பு என்ன, வங்கிக் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்பது குறித்து மதுமிதா விரிவாகப் பேசுவது வழக்கமாக இருந்தது. இந்த வீடியோக்களுக்கு கருத...