Posts

Showing posts with the label no DNA test

நேரில் தோன்றிய இறந்துபோன மனைவி! சுத்துபோட்டு பிடித்த கணவன்! விசாரணையில் பகீர்!

Image
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரமேஷ். அவருடைய வாழ்க்கை ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கையாகவே தொடங்கியது. மனைவி சுனைனாவுடன் சில ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். ஆனால் அடிக்கடி ஏற்படும் சண்டைகளும், மதுவின் தாக்கத்திலும் ஏற்படும் தகராறுகளும் அவர்களுடைய வாழ்க்கையை கொந்தளிப்பாக்கியது. ஒருநாள் சுனைனா வீட்டை விட்டு காணாமல் போனாள். அந்தத் தகவல் கிடைத்ததும் அவளுடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். “எங்கள் மகள் காணாமல் போய்விட்டாள். மருமகன் மீதுதான் சந்தேகம்” என்று அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள். காவல்துறையினர் ரமேஷை விசாரணைக்கு அழைத்தனர். அக்கம்பக்கத்தினரின் வாக்குமூலங்களும், அடிக்கடி நடந்த சண்டைகளின் விவரங்களும் அவருக்கு எதிராகவே திரும்பின. அந்த நேரத்தில் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சுனைனாவின் பெற்றோரை அழைத்து அந்த உடலைக் காட்டினார்கள். “இதுதான் எங்கள் மகள்” என்று அவர்கள் உறுதிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரமேஷுக்கு ஆயுள் தண்டனை வித...