மது போதையில் விடிய விடிய ஆபாசம்.. மனைவி உயிரிழந்தது கூட தெரியாமல் அசிங்கம்.. விசாரணையில் வெளியான கொடூரம்..
சென்னை: எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த 29 வயதான பெண் காவலர் புவனேஸ்வரி நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த இவர், கணவரின் தொடர் சித்திரவதை, சந்தேக நோய் மற்றும் சமீபத்தில் ஏற்பட்ட பண பிரச்சனை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த எடுத்த முடிவு எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. புவனேஸ்வரியின் பின்னணி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் காவலராக சேர்ந்த இவர், ஆவடி பெட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக அயல் பணியாக சென்னை எழும்பூர் குற்றப் பிரிவில் (எழும்பூர் காவல் நிலையம்) பணியாற்றி வந்தார். எழும்பூர் காவலர் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காதலும் திருமணமும்... பின்னர் தொடங்கிய கொடுமைகள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரை காதலித்து, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தி...