ஸ்டாலின் தோல்வி குறித்து ஆதவ் அர்ஜுனா ஓப்பனாக சொன்ன பின்னணி ரகசியம்!
சென்னை : வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா சுமார் 18,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வெற்றிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா கூறியதாவது: “எல்லோருக்கும் வணக்கம். வில்லிவாக்கத்தில் இப்போதுதான் வந்து என்னை எலக்சன் வின்னர் என்று டிக்ளேர் செய்தார்கள். சுமார் 18,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி. தமிழக மக்களுக்கும், குறிப்பாக என் உறவுகளான அம்மாக்கள், தங்கைகள், இளைஞர்கள், தம்பிகளுக்கு நன்றி. எங்கள் தலைவர் விஜய் அவர்களின் பிரச்சாரமும், மக்கள் வைத்த நம்பிக்கையும் இந்த வெற்றியைத் தந்துள்ளது. தமிழகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது.” மேலும் பேசிய அவர், “இன்னும் 20-25 தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 40 தொகுதிகளுக்கு மேல் கவுண்டிங் நடைபெற்று வருகிறது. 100, 500, 1,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் போட்டி நடைபெறும் சூழலில் கடைசி சுற்று வரை காத்திருக்க வேண்டும். 11 மணி அல்லது 12 மணிக்கு முழு முடிவுகள் தெரியும்” என்றார். தனிப்பெரும்பான்மை உறுதி தவெக தனிப்பெரும...