Posts

Showing posts with the label Prime Minister Modi

மோடியின் ஸ்பெஷல் INVITATION - அண்ணாமலைக்கு BIG SURPRISE

Image
பிரதமர் நரேந்திர மோடி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னையில் தங்கியிருக்கும் நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பாஜகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை, பிரதமரின் நேரடி அழைப்பை ஏற்று திடீரென சென்னை வந்துள்ளார். சென்னையில் இன்று (ஏப்ரல் 4, 2026) பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பாஜக தேசியத் தலைமை உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை அதிருப்தி பின்னணி தமிழக பாஜகவின் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களான அமர் பிரசாத் ரெட்டி, வினோஜ் பி. செல்வம், எஸ்.ஜே. சூர்யா, முருகானந்தம் உள்ளிட்டோருக்கு இடம் கிடைக்கவில்லை. அண்ணாமலை கேட்ட தொகுதியும் ஒதுக்கப்படாததால் அவர் போட்டியிட மாட்டார் என முன்னதாகவே தெரிவித்திருந்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் இடையே அதிருப்தி நிலவி வந்தது. இந்தச் சூழலில் பிரதமர் மோடி நேரில் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டத்தில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூ...