Posts

Showing posts with the label Aravind Swamy

"ஜஸ்ட் மிஸ்..." - "மாநாடு" படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில்.. முதலில் நடிக்கவிருந்தது இவரா..?

Image
  'மாநாடு' படம் திரையரங்குகளில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படம் சிம்புவின் திரையுலக வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.    இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு வெகுவாக பாரட்டப்பட்டது. இந்தப் படத்தில் அவரது பங்களிப்பும் முக்கியமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் 'மாநாடு' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வேடத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் குறித்து தகவல் ஒன்றை வெளியாகியுள்ளது.    இதுகுறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த வெங்கட் பிரபு, ''முதலில் தனுஷ்கோடி என்ற வேடத்துக்கு அரவிந்த் சாமியை அனுகியதாகவும், அவருக்கு கதை பிடித்திருந்ததால் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவத்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.    இருப்பினும் படம் தாமதமானதன் காரணமாக அவரால் இந்தப் படத்தில் நடிக்க இயலவில்லை. அவர் அப்போது வேறு படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்'' என்று தெரிவித்திருந்தார்.    இதனை உறுதிபடுத்தும் விதமாக மாநாடு படத்துக்கு வாழ்த்து தெரிவித்த அரவிந்த சாமி, இந்தக் கதையை நேசித்த...

25 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்த முன்னணி நடிகர்..! - உச் கொட்டும் ரசிகர்கள்..!

Image
நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் ஹெச்.வினோத் ஆகியோர் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகவுள்ள படம் "வலிமை". படத்தின் பூஜையின் போதே வலிமை என்ற பெயரையும் படக்குழு அறிவித்துவிட்டனர்.  இப்படத்திற்காக அஜித் பிட்டாக மாற நேரம் எடுப்பதால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த நிலையில் தான் படம் குறித்து ஒரு தகவல வெளியாகி ரசிகர்களை உச் கொட்ட வைத்துள்ளது.  ஆம், தனி ஒருவன் என்ற படம் மூலம் வில்லனாக கலக்கிய நடிகர் அரவிந்த் சாமியை வலிமை படத்தில் நடிக்க கேட்டுள்ளனர்.  ஆனால், மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்களின் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதால் வேறு வழியே இல்லாமல் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம். அஜித்துடன் மட்டும் இவர் நடித்தால் செம மாஸாக இருக்குமே என ரசிகர்கள் வருந்துகின்றனர். ஏற்கனவே, கடந்த 1994-ம் ஆண்டு வெளியான பாசமலர்கள்என்றபடத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள்.  அதன் பிறகு, 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இருவரும் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் சாமியா இது.? - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்

Image
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தயாராகி வருகிறது. கங்கனா ரனாவத் முன்னணி வேடத்தில் நடிக்க அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார்.  இதற்காக அரவிந்த் சாமி தன்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி வருகிறார். மீசையின்றி எம்ஜிஆராக மாறியுள்ள அவரது புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதைப்பார்த்த ரசிகர்கள் அரவிந்த் சாமியா இது.? என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.