மருமகனுடன் தாய் உல்லாசம்! நடுரோட்டில் நின்று கதறிய இளம்பெண்! சினிமாவை மிஞ்சும் கொடூர உண்மை!
முத்தேனஹள்ளி (கர்நாடகா): நடுராத்திரியில் முகம் வேர்த்தபடி, கண்களில் கண்ணீர் வழிய, ஒரு இளம்பெண் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றுகொண்டிருந்தாள். “சார்... என் கணவரும் என் சித்தியும் ஓடிப்போயிட்டாங்க. என் வாழ்க்கையே போச்சு சார்!” என்று குரல் தழுதழுத்தபடி கூறினாள். அந்த இளம்பெண் ஹேமா. வயது 22. திருமணமாகி வெறும் இரண்டே மாதங்கள் தான் ஆகியிருந்தன. காவலர்கள் அவளை உள்ளே அழைத்துச் சென்று விவரம் கேட்டபோது, ஹேமா ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினாள். அது ஒரு குடும்பத்தின் மொத்த வாழ்க்கையையும் சின்னாபின்னமாக்கிய சுயநலத்தின் கதை. கர்நாடகாவின் முத்தேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ். கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தவர். முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்தபோது, இரண்டு குழந்தைகளுடன் தவித்தார். சொந்தக்காரர்கள் அறிவுரை சொன்னார்கள்: “பிள்ளைகளைப் பார்க்க ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொள்.” அதன்படி, சாந்தா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார் நாகராஜ். சாந்தா, தன் வயிற்றில் பிறக்காத பிள்ளைகளான நாகராஜின் மகன்-மகளைத் தன் பிள்ளைகளாகவே நேசித்து வளர்த்தாள். குறிப்பாக, மூத்த மகள் ஹேமாவுக்கு வயது வந்தபோது, சாந்த...