Posts

Showing posts with the label crime web series

சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்.. காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி.. நினைச்சாலே குலைநடுங்குது.

Image
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஒரு கொடூரமான கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டு, காதலனுடன் சேர்ந்து செயல்படுத்திய மனைவி, அவரது காதலன் மற்றும் காதலனின் நண்பர் ஆகிய மூவரையும் ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை திட்டத்தை வகுக்க, பிரபல கிரைம் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சிஐடி' மற்றும் பல கிரைம் வெப் சீரிஸ்களை பார்த்து ஐடியாக்கள் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர் 35 வயதான மனோஜ் குமார் ரைகர். இ-ரிக்ஷா டிரைவராக வேலை செய்து வந்த இவர், இந்த மாத தொடக்கத்தில் ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஒரு கால்பந்து மைதானம் அருகே ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக கண்டெடுக்கப்பட்டார். கூர்மையான ஆயுதத்தால் அவரது தொண்டை அறுக்கப்பட்டிருந்தது. கொலை நடந்த இடத்தில் கண்ணுற்ற சாட்சிகளோ அல்லது சிசிடிவி காட்சிகளோ இல்லாததால், ஆரம்பத்தில் போலீசாருக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. வழக்கு திசைதெரியாமல் தவித்தது. ஆனால், தீவிர விசாரணையில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டது. கடைசியாக மனோஜ் ஒரு இ-ரிக்ஷாவில் மற்றொரு நபருடன் செல்வதை ...