Posts

Showing posts with the label Pushparani

ஆள் இல்லாத காட்டுக்குள் தன்னை விட 8 வயது குறைந்த காதலனுடன் சென்ற பெண்.. அரங்கேறிய கொடூரம்!

Image
ஈரோடு மாவட்டம் கோபி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த 43 வயது புஷ்பராணி என்பவர், தன்னை விட எட்டு வயது குறைவான 32 வயது மகேந்திரன் என்பவருடன் ரகசிய காதலில் ஈடுபட்டிருந்தார். அந்த உறவை அவரது மனைவியிடம் கூறிவிடுவதாக மிரட்டியதால், மகேந்திரன் தனது அக்கா கணவருடன் சேர்ந்து புஷ்பராணியை சேலம் மாவட்டத்தில் கொலை செய்து, சடலத்தை தருமபுரி மாவட்டத்தில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புஷ்பராணியின் கணவர் வடிவேல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், 17 மற்றும் 15 வயது மகள்களுடன் அவர் வசித்து வந்தார். வருமானத்துக்காக கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோயிலில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 25-ம் தேதி வேலைக்குச் சென்ற புஷ்பராணி வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. மகள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பெரும்பாழை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொப்பையாறு பகுதியில் ஒரு பெண்ண...