அக்காவின் கணவருடன் கள்ளத்தொடர்பு.. உடலுறவின் போது வினோத ஆசை.. இறுதியில் அரங்கேறிய கொடூரம்!
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகேயுள்ள ஓச அள்ளி புதூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள கள்ளத் தொடர்பு கொலை வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு கட்டிட மேஸ்திரியாக பணியாற்றும் 40 வயதான கே. அனுமந்தன் (Anumanthan), 10 ஆண்டுகளுக்கு முன்பு வரதராஜன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதான முனியம்மாள் உடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதேபோல், முனியம்மாளின் தங்கை 30 வயதான ராஜேஸ்வரிக்கு அனுமந்தனின் தம்பி முறை உறவினரான பிரபு உடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அக்கா-தங்கை இருவரும் உறவினர்களைத் திருமணம் செய்து கொண்டதால், அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ராஜேஸ்வரிக்கும் அக்காவின் கணவரான அனுமந்தனுக்கும் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசுவதும், வீட்டாருக்கு தெரியாமல் வெளியில் சந்திப்பதும் வழக்கமானது எனத் தெரிகிறது. சம்பவத்தன்று (சனிக்கிழமை), அனுமந்தன் ராஜேஸ்வரியை தளவாய் அள்ளி கிராமம் அருகிலுள்ள கரட்டு பக...