திரிஷா ஜாதகத்தில் நான் கணித்த எல்லாமே 100% நடந்தது.. அடுத்து இது தான்.. பிரபல இயக்குனர் கணிப்பு!
சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் இயக்குனர் பிரவீன் காந்தி, நடிகை திரிஷாவின் சினிமா அறிமுகம் முதல் அவரது ஜோதிட கணிப்பு வரை பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, திரிஷா ஒருநாள் முதலமைச்சர் ஆகும் அளவுக்கு யோகம் கொண்டவர் என்று 1999-லேயே தான் சொல்லியிருப்பதாக அவர் குறிப்பிட்டது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1999-இல் வெளியான ‘ஜோடி’ படத்தை இயக்கியபோது, நாயகியுடன் இருக்கும் காட்சிகளுக்கு அழகான மாணவிகள் தேவைப்பட்டதாக பிரவீன் காந்தி நினைவுகூர்ந்தார். அப்போது சர்ச் பார்க் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த திரிஷா, கோடை விடுமுறையில் சூட்டிங்கிற்கு வந்தார். தாரா உமேஷ் மூலம் அவர் அறிமுகமானார். அவரைப் பார்த்ததும் ஒரு பெரிய கதாபாத்திரமே கொடுக்கலாம் என்று நினைத்ததாக பிரவீன் காந்தி கூறினார். ஆனால் அப்போது திரிஷாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் பெரிதாக இல்லை. “சினிமா நல்லதா கெட்டதா என்று தெரிந்து கொள்ளத்தான் வந்தேன்” என்று அவர் சொன்னதாகவும், அவரது அம்மாவுக்கும் ஆரம்பத்தில் தயக்கம் இருந்ததாகவும் பிரவீன் காந்தி தெரிவித்தார். அனுபவத்திற்காக வந்த அந்த வருகைதான் அவரது வா...