செல்வராகவன் மனைவி விவாகரத்துக்கு இது தான் காரணமா..? புதுசா இருக்கே..!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி (கீதா) இடையே பிரிவு ஏற்பட்டுள்ளதாக சமீப காலமாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது கீதாஞ்சலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவனுடனான அனைத்து புகைப்படங்களும் நீக்கப்பட்டிருப்பதே. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளது. செல்வராகவன் 2011-ம் ஆண்டு தனது உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், திடீரென எழுந்த இந்த பிரிவு வதந்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு பேட்டியில் செல்வராகவன், "என் வாழ்க்கையில் மிகுந்த கோபமும் துயரமும் அடைந்த தருணம் விரைவில் தெரியவரும்" என்று கூறியது மீண்டும் வைரலாகி, இது விவாகரத்து தொடர்பானது தானா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஆனால், இதுவரை செல்வராகவன் அல்லது கீதாஞ்சலி தரப்பில் இருந்து எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மத...