மதுரை LIC கிளை தீ விபத்தில் திடீர் திருப்பம்! வெளியான திக் திக் தகவல்!
மதுரை, ஜனவரி 20 : மதுரை எல்ஐசி கிளை அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி ஏற்பட்டதாகக் கூறப்பட்ட தீ விபத்தில் முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி உயிரிழந்த சம்பவம் விபத்தல்ல, கொலை என போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதில் குற்றவாளியாக உதவி நிர்வாக அதிகாரி டி. ராம் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் என்ன நடந்தது? மதுரை ரயில் நிலையம் எதிரே மேலவெளிவீதியில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் டிசம்பர் 17 இரவு சுமார் 8.30 மணியளவில் தீப்பிடித்தது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினாலும், மேலாளர் கல்யாணி நம்பி (55) தனி அறையில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார். உதவி நிர்வாக அதிகாரி ராம் (44) தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். முதலில் இது மின் கசிவு காரணமான விபத்து எனக் கருதப்பட்டது. ஆனால், கல்யாணி நம்பியின் மகன் லட்சுமி நாராயணன் திலகர் திடல் போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை தீவிரமடைந்தது. அவரது தாய் தீ விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் பதற்றத்துடன் தொலைபேசியில் அழைத்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறியதாக புகாரி...