கணவனை ஏமாற்றி வெளிநாடு போன மனைவி இந்தியாவில் ரகசியமாக காதலனோடு லாட்ஜில்.. விசாரணையில் பகீர்..!
திருவனந்தபுரம் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் 33 வயது இளைஞர் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கேரளத்தையே உலுக்கியுள்ளது. கொல்லம் மாவட்டம் புனலூர் பகுதியைச் சேர்ந்த அஜித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரே உயிரிழந்தவர். இவருடன் தங்கியிருந்த 30 வயது பெண் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருமணமான இரு குழந்தைகளின் தாயான பிரியா, கடந்த இரு ஆண்டுகளாக குடும்பத்தினரிடம் “கல்ஃப் நாட்டில் நர்ஸாக வேலை செய்கிறேன்” என்று பொய் சொல்லி ஏமாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் தகாத உறவில் ஈடுபட்டிருந்தனர். அஜித் வேலை தேடி செல்வதாகவும், பிரியா கல்ஃப் சென்றிருப்பதாகவும் குடும்பத்தினரிடம் கூறி திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் சந்தித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு பிரியா கல்ஃப் நாட்டில் கிடைத்த நர்சிங் வேலையை ரகசியமாக ராஜினாமா செய்துவிட்டு திருவனந்தபுரத்தில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். அத்துடன் உள்ளூர் தனியார் மருத்துவமனையில் வேலைக்க...