Posts

Showing posts with the label Aiya Tamil

ஒவ்வொரு "ஷாட்"டும் என்னை வடிவமைத்தது.. ரகசியம் உடைத்த நயன்தாரா..!

Image
சென்னை, அக்டோபர் 12 : தென்னிந்திய சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, தனது சினிமா வாழ்க்கையில் 22 ஆண்டுகளை முடித்து கொண்டாடுகிறார். இந்த சாதனையை எழுதி, நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள அவர், "சினிமா என் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று ஆரம்பத்தில் தெரியவில்லை" என்று உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். மலையாள டிவி நிகழ்ச்சிகளில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த நயன்தாரா, 2003-ஆம் ஆண்டு வெளியான 'மன சினக்கரே' என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதன் தொடர்ச்சியாக, 2005-ஆம் ஆண்டு சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த 'ஐயா' படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத் துறையில் கால்பதம் வைத்தார். இந்தப் படம் அவரது தமிழ் சினிமா பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.அதன் பிறகு, ரஜினிகாந்த், விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நயன்தாரா, தனது அழகும், நடிப்பு திறனும், தைரியமும் காரணமாக விரைவில் ரசிகர...