அதிகாலையில் எமன் போட்ட மரண கயிறு.. அசராமல் நடந்தே சென்ற மாணவி.. நாட்டையே அதிர வைத்த மரணம்.. பின்னணி என்ன..?
கொப்பல், அக்டோபர் 22: கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மருத்துவப் பட்டதாரி மைதிலி, டைபாய்டு காய்ச்சலால் இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மருத்துவத் துறையையும் மாநிலத்தையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தன்னுடைய கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் அனைவரையும் ஈர்த்த இந்த இளம் மருத்துவர், உடல்நலக் குறைவால் தனிமையில் போராடி மரணமடைந்தது அனைவரையும் கலங்கச் செய்கிறது. மைதிலி, தெலுங்கானா மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்து, கடந்த ஆறு மாதங்களாக கர்நாடகாவின் கொப்பல் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தனியாகவே வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். இருப்பினும், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு விரிவான சோதனைகளை நடத்தியது. மருத்துவக் குழுவினர், அவருக்கு ஏதேனும் வைரஸ் தொற்று உள்ளதோ என்று சந்தேகித்து ரத...