Posts

Showing posts with the label child abandonment

6வது கணவருடன் சென்ற மனைவி.. 5வது கணவர் கொடுத்த திடுக்கிடும் புகார்.. விசாரணையில் வெளியான சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

Image
கள்ளக்குறிச்சி, நவம்பர் 4: டிக்டாக் செயலியில் அறிமுகமான பெண்ணை விசாரணை செய்யாமல் திருமணம் செய்து, ஆறு ஆண்டுகள் குடும்பம் நடத்திய நிலையில், அவளின் முந்தைய நான்கு திருமண மோசடிகளை அறிந்து அதிர்ச்சியடைந்த சிவகுமார். தன்னை 5வது கணவனாக ஏமாற்றிய மனைவி காளீஸ்வரி, இப்போது 6வது கணவருடன் சென்று மாயமானார். இரண்டு குழந்தைகளுடன் தவித்து நிற்கும் இந்த 5வது கணவன், போலீஸ் மற்றும் ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தற்கொலை முயன்றார்.  வடிவேலு காமெடி பாணியான இந்த திருமண மோசடி சம்பவம், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (35), சென்னை துறைமுகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். 2019ஆம் ஆண்டு டிக்டாக் செயலியில் அறிமுகமான மதுரை மாவட்டம் டி.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரி (30) என்பவருடன் பழக்கம் உருவானது. பொருளாதார நெருக்கடி, கடன் பிரச்சனையை ஓட விடும் பணவசிய மை! போன் மூலம் பேசிய காளீஸ்வரி, "முதல் கணவர் பிரிந்து சென்றார், தாய் இறந்துவிட்டேன், சித்தி கொடுமை செய்கிறார்" என கதறி அழுத...