Posts

Showing posts with the label Gajendran Abinaya

மனைவியின் தங்கையுடன் விசித்திர உறவு.. துடிதுடித்த புது மாப்பிள்ளை.. தோண்ட தோண்ட வெளியே வந்த பூதம்!

Image
வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே உள்ள சிவபுரம் கிராமம். அங்கு வசித்து வந்த கஜேந்திரன், 34 வயது. நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாத அவருக்கு அண்ணன் ஜெய்சங்கர் சென்னையில் கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருந்தார். தம்பிக்கு ஒரு நல்ல பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அப்போது, ஜெய்சங்கரிடம் பெயிண்டர் மற்றும் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்த முனுசாமி என்பவர், “என் உறவுக்காரப் பெண் ஒருவர் இருக்கிறார். சிறுவயதிலிருந்தே நாங்களே வளர்த்தோம். திருமணத்துக்கு தேவையான நகை, பொருட்கள் எதுவும் எங்களிடம் இல்லை” என்று கூறினார். பெண்ணுக்கும் விருப்பம் இருந்தால் திருமணம் செய்யலாம் என்று ஜெய்சங்கர் சம்மதித்தார். ஜெய்சங்கர் தன் சொந்த செலவில் சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை செலவழித்து, நகைகள், திருமணப் பட்டு, பொருட்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்தார். கடந்த மாதம் 7-ம் தேதி சோளிங்கர் முருகன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் கஜேந்திரனுக்கும் அபிநயா என்ற அந்தப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. மணமகள் வீட்டார் சார்பில் முனுசாமியும் அவரது தாயார் ஜோதியும் மட்டுமே வந்திருந்தனர். திருமணத்து...