Posts

Showing posts with the label closed shops

சேலம் பஸ் ஸ்டாண்ட் ஓரத்தில் பள்ளி மாணவிகளை கூட்டி வந்து கொடூரம்.. தமிழ்நாட்டின் ஈரக்குலையே நடுங்கும் வீடியோ..

Image
சேலம் பழைய பேருந்து நிலையம் (ஈரடுக்கு / டபுள் டெக்கர் பேருந்து நிலையம்) மேல் தளத்தில் உள்ள கடைகள் பூட்டப்பட்ட நிலையில் சமூக விரோதச் செயல்களுக்கு கூடாரமாக மாறியுள்ளது - கடுமையான குற்றச்சாட்டு சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரடுக்கு (டபுள் டெக்கர்) வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டு, பல கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்டது.  இதன் முதல் தளத்திலும் இரண்டாம் தளத்திலும் வணிக நோக்கத்திற்காக 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், பல ஆண்டுகளாக இந்த கடைகள் அனைத்தும் ஒப்பந்தம் விடப்படாமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளன. இதனால், இந்த பகுதி தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தினசரி ஏராளமான பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் இப்பகுதியை வந்து செல்லும் நிலையில், மேல் தள கடைகள் கஞ்சா புகைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், மது விற்பனைக்கும், பாலியல் தொழிலுக்கும் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிய வருகின்றன. சில கடைகளை திறந்து பார்த்தபோது, உள்ளே படுக்கை போன்ற அமைப்புகள், பயன்படு...