Posts

Showing posts with the label Manoj Prabu

சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்.. தங்கை மரணம்.. மனோஜ் பிரபு வெட்டி கொலை.. திடுக்கிடும் தகவல்!

Image
சிவகங்கை மாவட்டம், தமறாக்கி கிராமத்தைச் சேர்ந்த செல்ல சாமியின் மகன் மனோஜ் பிரபு (29), நேற்றிரவு இடையமேலூர் பகுதியில் நடந்த திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  காரில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள், மனோஜின் வாகனத்தை இடித்துத் தள்ளி, அவரை அரிவாளால் வெட்டியதாக உடனிருந்தவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மனோஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மனோஜிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த அபிமன்யு என்பவருக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது. மனோஜ், அபிமன்யுவின் தங்கை புவனேஸ்வரியை காதலித்து வந்தார்.  கருத்து வேறுபாடு காரணமாக புவனேஸ்வரி மனோஜைப் பிரிந்தார். இதையடுத்து, புவனேஸ்வரிக்கு மாப்பிள്ളை பார்க்கப்பட்ட நிலையில், மனோஜ் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.  இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து...