Posts

Showing posts with the label drunken brawl

21 ஆண்டுகளுக்கு பிறகு SIR-ல் சிக்கிய கொடூரன்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்.. மிரண்டு போன போலீஸ்..

Image
ஆவடி, நவம்பர் 27 : ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட என்னூர் காவல் நிலையத்தில் 2004ஆம் ஆண்டு மே மாதம் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி, 20 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார். பழைய வழக்குகளை மறு ஆய்வு செய்த ஆவடி காவல் ஆணையர் உத்தரவின் பேரில், சிறப்பு குழு அமைத்து நடத்திய விசாரணையில் இந்தக் கைது நடைபெற்றுள்ளது. 2004ஆம் ஆண்டு மே மாதம், என்னூர் காவல் நிலையத்தில் மரியம் பேபி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது வீட்டில் ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலையான நபர் அமானுல்லா என்பவரின் அண்ணன் என்று தெரியவந்தது. அப்போதைய விசாரணையில், குற்றவாளியாக ராஜேந்திரன் (அப்பா பெயர்: பரமசிவம்) என்பவர் அடையாளம் காணப்பட்டார். அவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிந்தது. இருப்பினும், அப்போது அவரைக் கைது செய்ய முடியவில்லை. ஆவடி காவல் ஆணையர் பொறுப்பேற்ற பிறகு, பழைய வழக்குகளை வாரந்தோறும் மறு ஆய்வு செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார். சுமார் 20 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தபோது, குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை...

கர்ப்பிணி அண்ணி.. மதுபோதையில் சிறுவன்... தாயுடன் சேர்ந்து செய்த பயங்கரம்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்

Image
குஜராத்,ஜூனாகத், நவம்பர் 4 : குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தின் சோபபட்டலா பகுதியில் நடந்த கொடூர சம்பவம் சினிமாவை மிஞ்சிய திருப்பங்களுடன் வெளிப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினர் விபத்தில் இறந்ததாக பொய்யான தகவலை பரப்பி, அவர்களின் சடலங்களை வீட்டுக்குள் புதைத்த தாயும் மகனும் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட சிவகிரி (22) மற்றும் கஞ்சன் குமாரி (20) ஆகியோர் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கினர். இருவரும் சிவகிரியின் வீட்டிலேயே வசித்து வந்தனர். சிவகிரியின் தம்பியும் அங்கு தங்கியிருந்தார். இருப்பினும், சிவகிரி மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி, தினசரி குடித்துவிட்டு வீட்டில் கலாட்டம் செய்வது, வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையாக இருப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. சம்பவம் நடந்த அன்று, சிவகிரியின் தம்பியுடன் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், மது போதையில் இருந்த தம்பி சிவகிரியை கடுமையாக தாக்கின...