காலையில் எழுந்த பின் வாட்டிய உடல் வலி.. பரிசோதனை செய்து பலாத்காரம் என சொன்ன டாக்டர்..
பெங்களூரு : கர்நாடக தலைநகர் பெங்களூருவின் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில், 22 வயது இளம்பெண் ஒருவர் ராபிடோ இருசக்கர வாகன ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், நவம்பர் 24-25, 2022 இரவு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி காவல் நிலைய எல்லையில் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தின் விவரங்கள் நவம்பர் 24, 2022 அன்று, கேரளாவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், பணி நிமித்தமாக பெங்களூருக்கு வந்திருந்தார். அன்று இரவு, பி.டி.எம் லேஅவுட்டில் உள்ள தனது நண்பரின் வீட்டில் இருந்து மற்றொரு நண்பரின் வீட்டிற்கு செல்வதற்காக ராபிடோ ஆப் மூலம் இருசக்கர வாகனத்தை புக் செய்தார். ஷாஹபுதீன் என்பவர் ஓட்டுநராக வந்து, அந்த பெண்ணை ஏற்றுக்கொண்டு பயணத்தை தொடங்கினார்.ஆனால், பயணத்தின்போது, பெண் மதுபோதையில் தள்ளாடியுள்ளார். மேலும், எனக்கு சிகரெட் வேணும் என அடம் பிடித்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஷாஹபுதீன், சிகரெட் வாங்கி தருகிறேன் என கூறி ஆப் மூலம் குறிப்பிடப்பட்ட இடத்திற்கு செல்லாமல், தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்ற...