Posts

Showing posts with the label Kalaignar scheme

ரூ. 2500 மகளிர் உரிமை தொகை எப்போது? எப்படி பெறுவது? முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

Image
சென்னை, மே 17: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடரும் என தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், மே 15 அன்று வழக்கமான ரூ.1,000 தொகை வரவு வைக்கப்படாது என்றும், மாதந்தோறும் ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. தேர்தல் அறிவிப்பின்போது, மு.க.ஸ்டாலின், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகை மற்றும் கோடைக்கால உதவித் தொகையுடன் சேர்த்து ரூ.5,000 ஒரே தவணையில் வழங்கப்பட்டது. மேலும், தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார். எனினும், சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து, தவெக 107 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசுகையில், “திமுக கொண்டுவந்த எந்தத் திட்டத்தையும் நிறுத்த வேண்டாம். கு...