Posts

Showing posts with the label India reincarnation

தினம் தினம் விலை மாதுவின் வீட்டுக்கு சென்ற சிறுவன்.. அடுத்த நடந்த அதிர்ச்சி.. மிரள வைக்கும் மறுபிறவியின் உண்மை கதை..

Image
உத்தரபிரதேச மாநிலத்தில், 1921 பிப்ரவரி 7ஆம் தேதி, பரேலி நகரில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பிஷன் சந்த் கபூர் என்று பெயர் சூட்டினர். குழந்தை வளர்ந்து கொண்டிருக்கும் போது, வழக்கமான குழந்தைகள் "அம்மா", "அப்பா" போன்ற சொற்களை முதலில் உச்சரிப்பது வழக்கம். ஆனால் இந்தக் குழந்தை, வெறும் 10 மாதங்களில் "பிலிபிட்" (Pilibhit) என்ற சொல்லை உச்சரித்தது. இது பெற்றோரை அதிர்ச்சியடையச் செய்தது. குழந்தை 3 வயதான போது, இந்த வீடு அழுக்கு, ஏழ்மை நிறைந்தாக இருக்கிறது. ஆனால், என் உண்மையான வீடு ஆடம்பரமானது என்று அடிக்கடி கூறியது. சாதாரண உடைகளை வீசியெறிந்து, ஆடம்பர உடைகளே விரும்புவதாகக் கூறியது. சைவ உணவை வெறுத்து, இறைச்சி உணவை ரகசியமாக சாப்பிட்டது. ஐந்து வயதிலேயே, இதுவரை செல்லாத இடங்களுக்கு சென்று மது குடித்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திருமியது தெரியவந்த போது, "இது என்னோட பழக்கம்" என்று அலட்சியமாகக் கூறியது. ரயிலில் பயணிக்கும் போது, பிலிபிட் ஸ்டேஷன் அறிவிப்பு கேட்டதும் இறங்க வேண்டுமென்று அடம்பிடித்தது. தந்தையிடம் "உங்களுக்கு ஏன் கள்ளக்காதலி இல்லை..?...